அறிமுக இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது 'பல்லு படாம பாத்துக்க'.
இதில் தினேஷ், சஞ்சிதா ஷெட்டி இணைந்து நடித்துள்ளனர். ஆனந்த் பாபு, ஜெகன், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜாம்பி கதைக்களத்தைக் கொண்டு உருவாகி உள்ள இப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தணிக்கைத் துறையினர் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். கொரோனா கிருமி விவகாரம் முடிவுக்கு வந்ததும் படம் வெளியாகும். இப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காதாம்.

