'மணவாழ்க்கையில் பிரச்சினை ஏதுமில்லை'

'மணவாழ்க்கையில் பிரச்சினை ஏதுமில்லை'

2 mins read
71814583-e02b-4e9d-a61c-e83aab82d923
கணவர் விகாஸ் வாசுவுடன் நடிகை ஸ்வாதி. -

தனது திரு­மண வாழ்க்­கை­யில் எந்­த­விதப் பிரச்­சி­னை­யும் இல்லை என்­றும் கண­வ­ரு­டன் மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தா­க­வும் நடிகை ஸ்வாதி தெரி­வித்­துள்­ளார்.

'சுப்­ர­ம­ணி­ய­பு­ரம்' படத்­தின் மூலம் தமிழ் சினிமா ரசி­கர்­க­ளின் மன­தைக் கொள்­ளை­கொண்­ட­வர் ஸ்வாதி.

தமி­ழில் பல படங்­களில் நடித்து முடித்­த­வர் பின்­னர் வாய்ப்­பு­கள் குறைந்­த­தும் தனி­யார் விமான நிறு­வன விமா­னி­யான விகாஸ் வாசு என்­ப­வ­ரைத் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

பிறகு நடிப்­பில் இருந்து வில­கி­னா­லும் சமூக வலைத்­த­ளங்­கள் மூலம் ரசி­கர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்து வந்­தார்.

இந்­நி­லை­யில் அண்­மை­யில் தமது கண­வ­ரு­டன் இணைந்­தி­ருக்­கும் புகைப்­ப­டங்­க­ளைத் தமது சமூக வலைத்­த­ளப் பக்­கங்­களில் இருந்து நீக்­கி­விட்­டார் ஸ்வாதி. இத­னால் மண­வாழ்க்­கை­யில் அவ­ருக்­குச் சிக்­கல் இருப்­ப­தாக பேசப்­பட்­டது.

இது­கு­றித்து ரசி­கர்­கள் பல­வி­த­மாக கருத்து தெரி­வித்து வந்­த­னர். இந்­நி­லை­யில் தமது கண­வ­ரது புகைப்­ப­டங்­களை அகற்­ற­வில்லை என்­றும் அவை அனைத்­தும் தம்­மி­டம் பத்­தி­ர­மாக உள்­ளன என்­றும் ஸ்வாதி தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இது தொடர்­பாக அவர் காணொ­ளிப் பதிவு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். அதற்கு ஹாரி­பாட்­டர் படத்­தின் இசை­யைப் பின்­ன­ணியாக சேர்த்­துள்­ளார்.

மேலும் ஒரு ரக­சிய அறையைப் பற்­றிய உரை­யா­ட­லும் அந்­தக் காணொ­ளி­யில் இடம்­பெற்­றுள்ளது. இதன்­மூ­லம் தமது கண­வ­ரின் புகைப்­ப­டங்­கள் அடங்­கிய தனி உறை (ஃபோல்டர்) தமது கைபே­சி­யில் இருப்­ப­தா­க­வும் அப்­ப­டங்­க­ளைத் தாம் அழித்­து­வி­ட­வில்லை என்­றும் ஸ்வாதி சூச­க­மா­கத் தெரி­வித்­தி­ருப்­ப­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே தாம் மீண்­டும் திரைப்­ப­டங்­களில் நடிக்க இருப்­ப­தாக வெளி­யான தக­வல் குறித்து ஸ்வாதி எது­வும் தெரி­விக்­க­வில்லை.