நல்ல லட்சியம் கொண்டுள்ள இளம்பெண்ணின் கதை

நல்ல லட்சியம் கொண்டுள்ள இளம்பெண்ணின் கதை

1 mins read
40b12633-7abf-41f1-adb1-58f198a7930d
ராஜசேகர் இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நாயகியாக நடித்துள்ள படம் 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி'. படம்: ஊடகம் -

ராஜசேகர் இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நாயகியாக நடித்துள்ள படம் 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி'. புதுமுகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஸ்ரீரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தீனதயாளன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். "கல்லூரியில் சிறப்பான கல்வியைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் நடைபோடும் கமலி திடீரென காதல் வயப்படுகிறாள். அவள் தன் லட்சியத்தை அடைந்தாளா, காதல் கைகூடியதா என்று இப்படம் விவரிக்கும். தெளிவான திரைக்கதையும் அர்த்தமுள்ள வசனங்களும் இளையர்களை நிச்சயம் கவரும். காதலையும் வாழ்க்கையையும் பற்றிப் பேசும் இந்தப் படத்தை அனைத்துத் தரப்பினரும் பார்க்க வேண்டும்," என்கிறார் அறிமுக இயக்குநரான ராஜசேகர்.