கொவிட்-19: ரூ. 1.30 கோடி நிதி அறிவித்த விஜய்

கொவிட்-19: ரூ. 1.30 கோடி நிதி அறிவித்த விஜய்

1 mins read
5cc2a2eb-4549-42da-b04a-d46405df1430
தனது ரசிகர் மன்றம் மூலமாகவும் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நேரடியாக நிவாரண நிதி வழங்கவும் விஜய் குறிப்பிட்ட ஒரு தொகையை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  படம்: சதீஷ் -

கொரோனா கிருமித் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக திரையுலகத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதியளித்து வருகின்றனர்.

மேலும் திரையுலகம் சார்ந்த சங்கங்களுக்கும் சிலர் நிதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் தன் பங்குக்கு 1.3 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம், தமிழ்த் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு 25 லட்சம் வழங்கியுள்ளார் விஜய்.

மேலும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுவை மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

இதுபோக தனது ரசிகர் மன்றம் மூலமாகவும் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நேரடியாக நிவாரண நிதி வழங்கவும் விஜய் குறிப்பிட்ட ஒரு தொகையை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்