நம்பிக்கையூட்டும் அருண் விஜய்

நம்பிக்கையூட்டும் அருண் விஜய்

1 mins read
e2a5b672-3cc1-476e-914e-bf12c5abddc4
ஊரடங்கு வேளையில் ரசிகர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.  படம்: ஊடகம் -

ஊரடங்கு வேளையில் ரசிகர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

அண்மைய சில தினங்களாக டுவிட்டர் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இவர், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சில வரிகளைப் பகிர்ந்து வருகிறார்.

அண்மைய ஒரு பதிவில், "நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டிப் பாராட்ட வைப்பதே வெற்றி. தன்னம்பிக்கையோடு உழைத்திடு, உயர்ந்திடு," என்று குறிப்பிட்டுள்ளார் அருண் விஜய்.

இந்த வரிகளைப் படித்த பிறகு மனதில் பெரும் நம்பிக்கையும் உத்வேகமும் ஏற்பட்டிருப்பதாக ரசிகர்கள் பலர் பின்னூட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் பதில் அளித்து வருகிறார் அருண் விஜய்.