தூக்கமின்றி அவதிப்படும் நாயகி மகிமா

தூக்கமின்றி அவதிப்படும் நாயகி மகிமா

1 mins read
cd97295c-49a3-41c2-a10c-e21850fa7ffe
தூக்கமின்மையைப் போக்குவதற்கு யோகாசனம் செய்து வருகிறாராம் மகிமா நம்பியார். படம்: ஊடகம் -

நடிகை மகிமா நம்பியார் ஒருவகை நோயால் அவதிப்படுவதாக அண்மையில் தகவல் வெளியானது.

இது சமூக வலைத் தளத்தில் வெளியான நகைச்சுவை பதிப்பாக இருக்கும் என்று பலர் கருதினர்.

இந்நிலையில் தமக்கு இன்சோம்னியா பிரச்சினை இருப்பதாக மகிமாவே உறுதி செய்துள்ளார். இது ஒருவகையான தூக்கமின்மை குறைபாடு. பரபரப்பான திரையுலகப் பணிகளுக்கு மத்தியில் இந்த நோயால் அவதிப்படுவதாக சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார் மகிமா.

இந்த நோயிலிருந்து மீள 6 முக்கிய யோகாசனங்களைப் பயிற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர், தனது பிரச்சினை தீர 6 யோகாசனங்களும் மிக அவசியம் எனத் தெரிவித்துள்ளார். இதேபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் யோகாசனம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்.