சிறு வயதில் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என மிகவும் விரும்பினாராம் மாளவிகா மோகனன்.
'மாஸ்டர்' படத்தில் நடித்து வரும் இவர் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக பைக் ஓட்டியதாக அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
15 வயதிலேயே பைக் ஓட்ட வேண்டும் என்று தாம் ஆசைப்பட்டதாகவும் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் மாளவிகா.
"நாங்கள் வசித்த குடியிருப்பில் நண்பர் ஒருவர் புல்லட் பைக் வைத்திருந்தார். என் அம்மாவுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக அந்த வண்டியை ஓட்டிப் பழகினேன். சென்ற ஆண்டு டெல்லி சென்றிருந்தபோது அங்குள்ள நண்பர்களை பைக் ரேஸ் நடக்கும் இடத்தில் சந்தித்துப் பேசினேன்.
"அப்போது நண்பர்களுடன் சேர்ந்து பைக் ஓட்ட வேண்டும் எனும் ஆசை மனதில் எழுந்தது. நண்பர்களிடம் சொல்லி அந்த ஆசையைப் பூர்த்தி செய்துகொண்டேன். வேகமாக ஓட்டவில்லை என்றாலும் அந்த அனுபவம் பெரும் மகிழ்ச்சி அளித்தது," என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

