விஜய் மகனுடனும் மோதும் சேதுபதி

1 mins read
bca41188-91a3-472f-bfc0-fc67c6e5284f
விஜய்யுடன் திரையில் மோதும் விஜய் சேதுபதி அடுத்து விஜய்யின் மகன் சஞ்சய்யுடன் மோத இருக்கிறார். படம்: ஊடகம் -

தற்போது விஜய்யுடன் திரையில் மோதும் விஜய் சேதுபதி அடுத்து விஜய்யின் மகன் சஞ்சய்யுடன் மோத இருக்கிறார்.

தற்போது கனடாவில் திரைத்துறை சார்ந்த படிப்பை படித்து வரும் சஞ்சய் ஊர் திரும்பிய பிறகு இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகுமாம்.

தெலுங்கில் வெளியாகியுள்ள 'உப்பென்னா' என்ற படத்தில் நாயகியின் தந்தையாக நடித்துள்ளார் சேதுபதி. இப்படத்தின் தமிழ் மறுபதிப்பு உரிமையையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது இப்படத்தின் கதையை விஜய்யிடம் அவர் விவரிக்க, அது தனது மகனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்றாராம் விஜய்.

இதையடுத்து 'உப்பென்னா' தமிழ் மறுபதிப்பை சேதுபதி தயாரிக்க, அதில் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாகத் தகவல். தமிழிலும் சேதுபதிதான் வில்லனாம்.