நடிகை அனுஷ்காவும் ஆதரவற்றவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறாராம்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு தமது குடும்பத்தாருடன் அதிக நேரத்தைச் செலவிட முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இவரது தந்தையின் பிறந்தநாள் வந்திருக்கிறது. இதையடுத்து வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடிய நிகழ்வைப் படம்பிடித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா.
அந்தப் பதிவில் தனது தந்தை மிகவும் அழகான, அன்பான உற்சாகமான மனிதர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
"எங்களுக்காக சிறந்த விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள். இன்று உங்கள் பிறந்தநாள். எப்போதும்போல் புன்னகைத்துக் கொண்டே இருங்கள். ஏனெனில் அதுதான் எங்களை மகிழ்விக்கும் அப்பா," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அனுஷ்கா.

