இசையமைப்பாளர் ஜெய்

இசையமைப்பாளர் ஜெய்

3 mins read
ed0d1f4a-a69a-4cf2-b49e-cb377dec83a1
சிறு வயது முதலே இசை­ய­மைப்­பா­ள­ராக வேண்­டும் என்­ப­து­தான் தமது லட்­சி­ய­மாக இருந்­தது என்­கி­றார் ஜெய். நடி­க­ரா­னது தற்­செ­ய­லாக நிகழ்ந்த ஒன்று என்­றும் சொல்­கி­றார். படம்: ஊடகம் -

சில வெற்­றிப் படங்­களில் நடித்­தி­ருந்­தா­லும் நடி­கர் ஜெய் தனது திரைப்­ப­ய­ணத்­தில் அடுத்­த­கட்ட உச்­சங்­களை எட்­டிப் பிடிக்­க­வில்லை என்று விமர்­ச­கர்­கள் கூறு­வ­துண்டு.

எனி­னும் தன்­னைச் சுற்றி பல்­வேறு சர்ச்­சை­கள் இருந்­தா­லும் சில தோல்­வி­க­ளைச் சந்­தித்­தா­லும் அனைத்­தை­யும் புறந்­தள்­ளி­விட்டு நேர்­ம­றை­யாக­வும் தன்­னம்­பிக்­கை­யு­ட­னும் பேசும் ஜெய்யை பாராட்­டு­ப­வர்­களும் உண்டு.

சிறு வயது முதலே இசை­ய­மைப்­பா­ள­ராக வேண்­டும் என்­ப­து­தான் தமது லட்­சி­ய­மாக இருந்­தது என்­கி­றார் ஜெய். நடி­க­ரா­னது தற்­செ­ய­லாக நிகழ்ந்த ஒன்று என்­றும் சொல்­கி­றார்.

"சிறு வய­தில் படிக்­கும் நேரம் போக மற்ற சம­யங்­களில் தேவா அப்பா உடன்­தான் இருப்­பேன். அவர் பாடல்­க­ளுக்கு மெட்­ட­மைப்­ப­தைப் பார்த்­துக்­கொண்டே இருப்­பேன். அப்­போது­தான் இசை மீதான எனது ஆர்­வம் வெகு­வாக அதி­க­ரித்­தது.

"இப்­போ­தும் ஒன்­றும் தாம­த­மாகி­வி­ட­வில்லை. நீங்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்­கும் இந்த ஜெய்க்­குள் இருந்து விரை­வில் ஓர் இசைக் கலை­ஞன் வெளி­வ­ரு­வான்.

"மிக விரை­வில் முன்­னணி நாய­கன் ஒரு­வ­ரின் புதுப்­ப­டத்­துக்­கான முதல் தோற்­றச் சுவ­ரொட்டி வெளி­யா­கும். அதில் இசை­ய­மைப்­பா­ளர் என்று என் பெயர் இருக்­கும்," என்று ஜெய் சொல்­வ­தைக் கேட்க ஆச்­ச­ரி­ய­மா­கத்­தான் இருக்­கிறது.

தனக்­குப் பிடித்­த­மான நடி­கர் ஜெய் என்று நயன்­தாரா ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார். இதைக் கண்டு மற்ற முன்­னணி நாய­கர்­கள் பொறா­மைப்­பட்­ட­னரோ இல்­லையோ, ரசி­கர்­கள் வியப்­பில் மூழ்­கி­னர்.

"நயன்­தாரா அனைத்­து முன்­னணி நாய­கர்­க­ளு­ட­னும் இணைந்து நடித்­த­வர். அனு­ப­வ­சாலி மட்­டு­மல்ல, திற­மை­யான நடி­கை­யா­க­வும் அசத்­து­கி­றார். இடை­யில் சில காலம் நடிக்­கா­மல் திரை­யு­லகை விட்டு வில­கி­யி­ருந்­தார் நயன்­தாரா. அதன்­பி­றகு 'ராஜா ராணி' மூலம் தமது இரண்­டா­வது சுற்­றைத் துவங்­கி­னார்.

"அந்­தப் படத்­தில் அவ­ரு­டன் ஜோடி சேர்ந்து நடித்­தேன். படம் பெரிய அள­வில் வெற்றி பெற்­றது. ஒரு­வேளை அவ­ருக்கு என்­னைப் பிடித்திருக்க இந்த சென்­டி­மெண்­டும் ஒரு கார­ண­மாக இருக்­க­லாம்," என்­கி­றார் ஜெய்.

'நானும் ரௌடி­தான்' படத்­தி­லும் இவர்­தான் நயன்­தா­ரா­வு­டன் நடிப்­ப­தாக இருந்­த­தாம். அதன் கதையை இவ­ரி­டம்­தான் இயக்­கு­நர் விக்­னேஷ் சிவன் முத­லில் சொன்­னா­ராம். ஆனால் கால்­ஷீட் பிரச்­னை­க­ளால் அப்­ப­டத்­தில் நடிக்க முடி­யாமல் போனது என்­கி­றார் ஜெய். படப்­பி­டிப்­பின்­போது நயன்­தாரா எந்­த­வித பந்­தா­வும் இல்­லா­மல் இயல்­பாக இருப்­பார். என்னை வெகு­வாக ஊக்­கப்­ப­டுத்­தி­னார். நன்­றாக நடிப்­ப­தா­கப் பாராட்­டி­னார் என்று நயன்­தாரா புரா­ணத்தை நன்­றா­கப் பாடு­கி­றார் ஜெய்.

என்­ன­தான் விஜய் நடித்த 'பக­வதி' மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னா­லும் ஜெய்க்­குப் பிடித்த கதா­நா­ய­கன் அஜித்­தா­னாம். 'சென்னை-600 028' படத்­தைப் பார்த்த பிறகு அன்­றி­ரவே தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு பாராட்­டி­னா­ராம்.

"நடிப்­பில் கூடு­தல் கவ­னம் செலுத்­துங்­கள். உங்­க­ளுக்கு நல்ல எதிர்­கா­லம் உள்­ளது என்று சில நிமி­டங்­கள் என்னை ஊக்­கப்­ப­டுத்­தும் வித­மாக தன் கருத்­து­க­ளைப் பகிர்ந்து கொண்­டார். அவ்­வ­ளவு பெரிய நடி­கர் என்னை தொடர்பு கொண்டு பேசி­யது வியப்­பாக இருந்­தது.

"அன்று முதல் இப்­போது வரை எப்­போ­தெல்­லாம் மன­த­ள­வில் சோர்­வாக உணர்­கி­றேனோ உடனே அஜித் சாரு­டன் பேசு­வேன். அவ­ரு­டன் பேசி­னாலே தனித்­தெம்பு வந்­து­வி­டும்.

"விஜய் சாரு­டன் நடித்­த­போது நிறைய தவ­று­கள் செய்­தேன். என்­னால் ஒவ்­வொரு காட்­சி­யை­யும் பட­மாக்­கு­வது தாம­த­மா­கும். இப்­போது நல்ல அனு­ப­வம் கிடைத்­தி­ருப்­ப­தால் மீண்­டும் அவ­ரு­டன் நடிக்க விரும்­பு­கி­றேன். அதி­லும் அவ­ருக்கு வில்­ல­னாக நடிக்க ஆசைப்­ப­டு­கி­றேன்," என்­கி­றார் ஜெய்.