'ஓடி ஒளிவதில் பயனில்லை'

'ஓடி ஒளிவதில் பயனில்லை'

3 mins read
fec402a3-cc0d-4ac3-9092-6aee4a371fba
-

நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு தமி­ழில் நடிக்க ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளார் டாப்சி. அக­மது இயக்­கும் படத்­தில் ஜெயம் ரவிக்கு ஜோடி­யாக நடிக்­கி­றா­ராம். இது துப்­ப­றி­யும் கதை என்­ப­தால் படம் முழு­வ­தும் திகி­லாக இருக்­கு­மாம்.

இதில் டாப்­சிக்கு சில சண்­டைக் காட்­சி­களும் உள்­ளன. தொடர்ந்து வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து நடித்து வரு­ப­வர் அக­மது கூறிய கதை­யைக் கேட்­ட­துமே நடிக்க ஒப்­புக்­கொண்டதா­கச் சொல்­கி­றார்.

"இது­வரை நடித்­துள்ள திரைப்­ப­டங்­களை மீண்­டும் ஒரு­முறை பார்த்­தால் போதும். நான் எவ்­வ­ளவு தவ­று­கள் செய்­தி­ருக்­கி­றேன் என்­பது தெரி­யும். 'ஆடு­க­ளம்' படத்­தில் நடித்­த­போது எனக்கு சினிமா என்­றால் என்­ன­வென்றே தெரி­யாது. இப்­போ­தா­வது கொஞ்­சம் நடிப்பு வரு­கிறது என்று உறு­தி­யா­கச் சொல்ல முடி­யும்.

"எனவே படங்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் இப்­போது மிகுந்த கவ­னத்­துடன் செயல்­ப­டு­கி­றேன். தமி­ழில் எனக்­கான வாய்ப்­பு­கள் குறைவு. எனி­னும் 'ஆடு­க­ளம்' முதல் 'கேம் ஓவர்' வரை நான் நடிப்­புக்­கு­தான் முக்­கி­யத்­து­வம் கொடுத்­தி­ருக்­கி­றேன்," என்கிறார் டாப்சி.

அண்­மை­யில் இயக்­கு­நர் வெற்­றி­மா­றனை சந்­தித்­தா­ராம். அப்­போது அவ­ரது படங்­களில் கதா­நா­ய­கர்­க­ளைப் போலவே நாய­கிக்­கும் பெரிய கதா­பாத்­தி­ரம் அமைக்­க ­வேண்­டும் என்­றும் அப்­ப­டிப்­பட்ட ஒரு கதா­பாத்­தி­ரத்­தின் மூலம் தமக்கு வாய்ப்­ப­ளிக்க வேண்­டும் என்­றும் கேட்­டுக்கொண்­டா­ராம்.

"ஒரு படத்­தில் நான் 30 நிமி­டங்­கள் வந்­தா­லும் போதும். ஆனால் அது சிறப்­பான கதா­பாத்­தி­ர­மாக இருக்கவேண்­டும். அப்­ப­டிப்­பட்ட படங்­க­ளுக்கு எத்தனை நாட்­கள் வேண்­டு­மா­னா­லும் கால்­ஷீட் தரத் தயார்," என்­கி­றார் டாப்சி.

அண்­மை­யில் டாப்சி நடித்து வெளி­யான 'தப்­பாட்' படம் விமர்­ச­கர்­க­ளால் வெகு­வா­கப் பாராட்­டப்­பட்­டது. குடும்ப வன்­மு­றைக்கு எதி­ரான இந்­தப் படத்­தில் டாப்சி சிறப்­பாக நடித்­தி­ருப்­ப­தா­கப் பல­ரும் பாராட்­டுத் தெரி­வித்­த­னர்.

"இந்­தப் படத்­தின் நாயகி குடும்ப வன்­மு­றையை எதிர்த்து தன் கண­வரை விவா­க­ரத்து செய்ய முடி­வெ­டுக்­கி­றார். ஆனால் நமது இந்­தி­யப் பெண்­கள் நிஜத்­தில் இவ்­வாறு செய்­வார்­களா என்று பல­ரும் கேட்­கின்­ற­னர்.

"என்­னைப் பொறுத்­த­வரை தங்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளுக்கு பெண்­கள் பதி­லடி கொடுக்க வேண்­டும். அவ்­வாறு இல்­லா­மல் இது­வும் கடந்­து ­போ­கும் என இருப்­பது தவறு. வன்­முறையைக் கண்டு ஓடி ஒளி­வ­தில் எந்­தப் பய­னும் இல்லை. இங்கு யாரும் பெண்­க­ளின் பிரச்­சி­னைக்­காக குரல் கொடுக்க முன்­வர மாட்­டார்­கள். பெண்கள் தங்களைத் தாங்­களே தற்­காத்­துக் கொள்ள வேண்­டும்," என்று சொல்­லும் டாப்சி, பெண்­களை மையப்­ப­டுத்­தும் படங்­க­ளின் எண்­ணிக்கை இந்­திய திரை உல­கில் அதி­க­ரித்­துள்ள போதி­லும் இந்­திய சினிமா முற்­றி­லு­மாக மாறி­வி­ட­வில்லை," என்­கி­றார்.

"என்­னைப் போன்ற சில நடி­கை­கள் மாறி­ய­தால் சினி­மா­வில் எங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தி­ருக்­கிறது. பன்­னெ­டுங்­கா­ல­மாக இருக்­கும் ஆணா­திக்­கம் ஒருசில ஆண்­டு­களில் மாறி­வி­டாது. சினி­மா­வைக் கடந்து பொது­வெ­ளி­யில் நான் பேசு­வது சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்தி இருப்­பது உண்­மை­தான்.

"கோவா திரைப்­பட விழா­வில் ஒரு செய்­தி­யா­ளர் அங்கு கேட்­கப்­படும் அனைத்­துக் கேள்­வி­க­ளுக்­கும் இந்­தி­யில் மட்­டுமே பதில் சொல்ல வேண்­டும் என்று கட்­ட­ளை­யிட்­டார். அதைக் கேட்­ட­போது எனக்கு அதிர்ச்­சி­யாக இருந்­தது. நான் இந்­தி­யில் மட்­டுமே நடிக்­க­வில்லை என்­ப­தால் எல்­லோ­ருக்­கும் புரி­யும் மொழி­யில் பேச விரும்­பு­வ­தாக சொன்­னேன். அதனால்­தான் தமி­ழில் பேசவா என்­றும் கேட்­டேன்.

"இதில் என்ன தவறு இருக்க முடி­யும்? அடுத்­த­டுத்து பட வாய்ப்­பு­கள் வருமா, வராதா என்­றெல்­லாம் நான் யோசிப்­பதே இல்லை. எது சரி­யெ­னப்படு­கி­றதோ அதைத்­தான் பேசு­கி­றேன். இப்­ப­டித்­தான் குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டம் குறித்து முதலில் போ­திய விழிப்புணர்வு இல்லை. ஆனால் மாண­வர்­கள் தாக்­கப்­பட்­டது தொடர்­பான காணொ­ளி­க­ளைப் பார்த்­த­போது மனம் வெதும்பி போனேன். என­வே­தான் மாண­வர்­களுக்கு ஆத­ர­வாக நான் குரல் கொடுக்க நேரிட்­டது," என்கிறார் டாப்சி.