''சில்லுக்கருப்பட்டி' படத்தை தனது பெற்றோருடன் இணைந்து பார்த்ததாகவும் அப்படம் தம்மை வெகுவாக உணர்ச்சிவசப்பட வைத்ததாகவும் கூறியுள்ளார் சாய்பல்லவி.
இப்படம் பார்த்த கையோடு அதன் இயக்குநர் ஹலிதா ஷமீமை மின்னஞ்சல் வழி தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"உங்கள் இயக்கத்தில் உருவான படத்தைப் பார்த்து விட்டு நானும் என் பெற்றோரும் உணர்ச்சி வசப்பட்டோம். உங்களுக்கான வாய்ப்பு கிடைத்ததற்காக நான் மகிழ்கிறேன்.
"இப்படிப்பட்ட ஓர் உணர்வை எங்களுக்குள் ஏற்படுத்தியதற்கு நன்றி. இதுபோன்ற மேலும் பல ரத்தினப் படைப்புகளை நீங்கள் உருவாக்கவேண்டும். எங்கள் அன்பும் பிரார்த்தனையும் எப்போதுமே உங்களுக்கு உண்டு," என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.

