ராமராஜன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

ராமராஜன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

2 mins read
c578075c-2330-4dd7-b76e-9a603368bb6f
நடிகை ஜோதி­கா­வுக்கு ஆத­ர­வாக தாம் எந்­த­வித கருத்­தும் தெரி­விக்க­வில்லை என  விஜய் சேது­பதி தெரி­வித்­துள்­ளார். படம்: ஊடகம் -

நடிகை ஜோதி­கா­வுக்கு ஆத­ர­வாக தாம் எந்­த­வித கருத்­தும் தெரி­விக்க­வில்லை என விஜய் சேது­பதி தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில் நடை­பெற்ற ஒரு விருது விழா­வில் கோவில்­கள் குறித்து ஜோதிகா பேசி­யது சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது.

கோவில் உண்­டி­ய­லில் பணம் போடு­வ­தைப்­போல் மருத்­து­வ­மனை­கள் மற்­றும் பள்­ளி­க­ளுக்­கும் அனை­வ­ரும் செல­விட வேண்­டும் என வலி­யு­றுத்தி இருந்­தார் ஜோதிகா. அவ­ரது இந்­தக் கருத்­துக்கு ஆத­ரவு, எதிர்ப்பு என இரண்­டும் கிடைத்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் ஜோதி­கா­வுக்கு ஆத­ர­வாக விஜய் சேது­பதி கருத்து தெரி­வித்­த­தாக இரு தினங்­க­ளுக்கு முன் ஒரு தக­வல் வெளி­யா­னது.

"ஜோதி­கா­வின் துணி­வான பேச்­சுக்கு வாழ்த்­து­கள். அவ­ருக்கு ஏதே­னும் பிரச்­சினை என்­றால் சக நடி­க­னாக முதல் ஆளாக வந்து நிற்­பேன். கோவில்­கள் மருத்­து­மனை­யாக மாறும் காலம் நெருங்கி விட்­டது," என விஜய் சேது­பதி கூறி­யி­ருப்­ப­தா­கப் பேசப்­பட்­டது.

இந்­நி­லை­யில் அவ­ருக்கு நெருக்க­மா­ன­வர்­கள் இத்­த­கைய கருத்து எதை­யும் அவர் தெரி­விக்­க­வில்லை என விளக்­க­ம­ளித்­த­னர். இந்­நிலை­யில் விஜய் சேது­ப­தியே இந்த விவ­கா­ரத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளார்.

இது­தொ­டர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், இது பொய்­யான தக­வல் என்று கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே முன்­னாள் இயக்­கு­ந­ரும் நடி­க­ரு­மான ராம­ரா­ஜ­னின் இயக்­கத்­தில் விஜய் சேது­பதி நடிக்க இருப்­ப­தாக மற்­றொரு தக­வல் தெரி­விக்­கிறது.

கடந்த சில ஆண்­டு­க­ளாக பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் உள்ள ராம­ரா­ஜன் அண்­மை­யில் சேது­பதியை சந்­தித்­தா­ராம். அப்­போது அவர் சொன்ன கதை சேது­ப­திக்கு மிக­வும் பிடித்­துப் போன­தாம்.

"இந்­தப் படத்­தில் ராம­ரா­ஜன் நடிக்­கப் போவ­தில்லை. படத்தை இயக்­கு­வது மட்­டுமே அவர் வேலை என்று கூறி­விட்­டார். சேது­ப­திக்கு ஏற்ற கச்­சி­த­மான கதைக்­க­ளத்­து­டன் அவர் கள­மி­றங்­கு­கி­றார்," என்­கிறது ராம­ரா­ஜன் தரப்பு.

இதுகுறித்து விஜய் சேதுபதியே விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.