'ஒரு சமூகமாக தோற்றுவிட்டோம்'

'ஒரு சமூகமாக தோற்றுவிட்டோம்'

1 mins read
7461a6fd-b001-4619-ac87-24e49def9a48
கடினமான சூழ்நிலையில் மருத்துவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீட்டில் இருக்க முடிவு செய்தால் என்னவாகும் என்பதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும் என காயத்ரி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  -

மருத்துவர்கள் யாரிடமும் பாகுபாடு பார்ப்பதில்லை என்று நடிகை காயத்ரி கூறியுள்ளார்.

கடினமான சூழ்நிலையில் மருத்துவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீட்டில் இருக்க முடிவு செய்தால் என்னவாகும் என்பதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும் என அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மருத்துவர் சைமன் போன்றோர் செய்த தியாகங்களை அனைவரும் நினைவுகூர வேண்டும் என காயத்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.

"நம் உயிர் காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதையா? அப்படியென்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டதாகவே அர்த்தம்," என காயத்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.