கொண்டாட்டம் வேண்டாம் என்கிறார் அஜித்

கொண்டாட்டம் வேண்டாம் என்கிறார் அஜித்

1 mins read
3341d2f4-75b7-4cfc-a5e1-009492e271bc
கோப்புப்படம் -

இந்தாண்டு தனது பிறந்தநாளுக்காக சிறப்புக் கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாம் என்று நடிகர் அஜித் தமது ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இம்முறை இத்தகைய கொண்டாட்டத்திடன் ஒரு பகுதியாக அஜித்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த சிறப்புப் புகைப்படம் (General Display Picture) ஒன்றை வெளியிட ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக திரையுலகப் பிரபலங்கள் சிலரை அணுகி புகைப்படத்தை அவர்கள் மூலம் வெளியிட வேண்டும் என்பது அவர்களின் திட்டம். அந்த வகையில் நடிகர் ஆதவ் கண்ணதாசனும் இந்தப் படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர இருந்தார்.

இந்­நி­லை­யில் அஜித் அலுவலகத்­தில் இருந்து தம்மை தொலை­பே­சி­யில் தொடர்புகொண்டு பேசி­ய­தா­க­வும், அப்போது அஜித் பிறந்த நாளை­யொட்டி புகைப்­ப­டம் எதை­யும் வெளி­யிட வேண்­டாம் என்று கேட்­டுக் கொண்­ட­தா­க­வும் ஆதவ் தெரி­வித்­துள்­ளார்.

"இது அஜித்­தின் தனிப்­பட்ட கோரிக்கை. ஒரு ரசி­க­னாக, சக நடி­க­னாக, மனி­த­னாக அவ­ரது வார்த்­தைக்கு மதிப்பு கொடுக்க விரும்­பு­கி­றேன்.

"அவ­ரது கோரிக்­கையை சமூக வலைத்­த­ளத்­தில் குறிப்­பிட்டு அனை­வ­ருக்­கும் விளக்­கட்­டுமா என்று கேட்­ட­போது அனு­மதி அளித்­த­னர்.

"எனவே கொரோனா கிரு­மித் தொற்று நிலவும் இந்த நேரத்தில் அனை­வ­ரும் நல­மாக வாழ வாழ்த்­து­வோம். 'தல' அஜித்­தின் வார்த்­தைக்கு மதிப்பு கொடுப்­போம்," என்று ஆதவ் கண்­ண­தா­சன் தமது டுவிட்டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.