ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'சைலன்ஸ்'. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இதில் அனுஷ்கா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பது தெரிந்த விஷயம்.
இந்நிலையில் அவருக்கு இந்தப் படம் நிச்சயம் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தரும் என்று திரையுலக விவரப்புள்ளிகள் தெரிவிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நான்கு இந்தியர்கள் அமெரிக்காவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் கதைக்கருவாம். அமெரிக்க காவல்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இருக்குமாம். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகரும் காட்சிகளால் படம் சுவாரசியமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் ஹேமந்த் மதுக்கூர்.

