ஊரடங்கு உத்தரவால் ராய்லட்சுமி சோகம்

1 mins read
616c5c84-3bb0-4eb7-97fd-b0b0484e5611
ஊரடங்கு உத்தரவால் எனது பொழுதுபோக்குகள் முடங்கிப் போய்விட்டன என்று வருத்தப்படுகிறார் ராய் லட்சுமி. படம்: ஊடகம் -

ஊரடங்கு உத்தரவால் சோகத்தில் மூழ்கி உள்ளார் நடிகை ராய் லட்சுமி.

கட்டாய விடுமுறை என்றாலும் சக நடிகைகள் உற்சாகமாக இருக்கும்போது நீங்கள் மட்டும் வருத்தப்படுகிறீர்களே என்று கேட்டால், வெளியே செல்லாமல் இருப்பதை விட வேறு கொடுமை இருக்கமுடியாது என்கிறார்.

அவரது புலம்பலுக்குக் காரணம் இதுதான். மலையேற்றப் பயிற்சி என்றால் ராய் லட்சுமிக்கு ரொம்பப் பிடிக்குமாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவாராம்.

இம்முறை கேரளாவின் மலைப்பகுதிக்குச் சென்று 15 நாள் முகாமிட இருந்தாராம். அதற்குள் கொரோனா கிருமி விவகாரம் பெரிதாகி ஊரடங்கில் வந்து முடிந்துவிட்டது.

"மலையேறுவது என்னுடைய முக்கியமான பொழுது போக்கு. இதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அதனால்தான் எவ்வளவு படப்பிடிப்பு இருந்தாலும் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது மலையேற்றம் செய்வேன். இந்தாண்டு அவ்வாறு செய்ய முடியவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது," என்கிறார் ராய் லட்சுமி.