தினமும் ஒரு லட்சம் பாதுகாப்பு அங்கி தயாரிப்பு

தினமும் ஒரு லட்சம் பாதுகாப்பு அங்கி தயாரிப்பு

1 mins read

புதுடெல்லி: கொவிட் 19 நோய்க்கு எதிராகப் போராடி வரும் மருத்துவப் பணியாளர்களுக்காக முழு உடல் பாதுகாப்பு அங்கியின் உற்பத்தி அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த அங்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை சுமார் 10 லட்சம் அங்கிகள் நாடு முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பாதுகாப்பு அங்கிகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

தற்போது ஒட்டுமொத்த தேவையில் 50 விழுக்காடு அங்கிகள் பெங்களூருவில் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் அங்கிகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.