‘பறவைகளின் ஒலிகேட்டு கண்விழிக்கிறேன்’

எப்­போ­தும் ஏதே­னும் வேலை­யில் ஈடு­பட்­டி­ருப்­ப­து­தான் தனது வழக்­கம் என்­றும் வீட்­டில் சும்மா இருக்க பிடிக்­காது என்­றும் ஐஸ்­வர்யா ராஜேஷ் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் ஊர­டங்கு உத்­த­ரவு அறி­விக்­கப்­பட்­ட­போது மிக­வும் சலிப்­பாக உணர்ந்­த­தாக அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். தற்­போது பர­த­நாட்­டி­யம் கற்­ப­தில் கவ­னம் செலுத்தி வரு­கி­றா­ராம்.

“படப்­பி­டிப்­பில் பங்­கேற்­பது என்­றால் எனக்கு மிக­வும் விருப்­பம். பல மணி நேரம் நீடித்­தா­லும் சோர்­வை­யும் களைப்­பை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் பங்­கேற்­பேன். ஒரு­வேளை படப்­பி­டிப்பு இல்லை என்­றால் திரைப்­ப­டம் சார்ந்த மற்ற பணி­கள் இருக்­கும்.

“எது­வுமே இல்லை என்­றால் நண்­பர்­க­ளைச் சந்­தித்­துப் பேசு­வது, திரைப்­ப­டங்­கள் பார்ப்­பது, அரட்டை அடிப்­பது என்று பொழுதுபோகும். ஆனால், தற்­போது வீட்­டில் இருப்­பது தவிர்க்க முடி­யாத ஒன்று என்­றா­கி­விட்ட நிலை­யில் சூழ்­

நி­லைக்கு ஏற்ப நம்மை மாற்­றிக்­கொள்ள வேண்டி உள்­ளது. அந்த வகை­யில் நானும் வேறு வழி­மு­றை­க­ளைக் கையாண்டு பய­னுள்ள வகை­யில் பொழு­தைக் கழிக்­கி­றேன்,” என்­கி­றார் ஐஸ்­வர்யா.

தற்­போது இணை­யம் வழி பர­த­நாட்­டி­யம் கற்று வரு­கி­றா­ராம். சென்­னை­யில் உள்ள கலா­ஷேத்­ரா­வைச் சேர்ந்த ஆசி­ரி­யர் ஒரு­வர்தான் இவ­ருக்­குப் பயிற்சி அளித்து வரு­கி­றார்.

“சிறு வயது முதலே பர­த­நாட்­டி­யம் கற்­க­வேண்­டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. சில காலம் குச்­சிப்­புடி நட­ன­மும் கற்­றேன். ஆனால், காலப்­போக்­கில் அந்­தப் பயிற்­சி­யைத் தொடர முடி­ய­வில்லை.

“என் அம்மா நல்ல பர­த­நாட்­டி­யக் கலை­ஞர். அவ­ரைப்­போல் நட­னம் கற்க முடி­ய­வில்­லையே என்ற ஏக்­கம் எனக்கு எப்­போ­துமே உண்டு. இந்­நி­லை­யில் திடீ­ரென ஊர­டங்கு அம­லுக்கு வந்­த­தால் நிறைய ஓய்வு கிடைத்­துள்­ளது. எனவே, பர­த­நாட்­டி­யம் கற்க முடிவு செய்து நண்­பர்­க­ளி­டம் ஆலோ­சனை கேட்­டேன். அப்­பொ­ழு­து­தான் காளி என்ற நடன ஆசி­ரி­யர் குறித்து தக­வல் கிடைத்­தது. அவர் என்­னைச் சிறப்­பாக வழி­ந­டத்­து­கி­றார்,” என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

தற்­போது தின­மும் 2 மணி நேரங்­க­ளா­வது பர­த­நாட்­டி­யப் பயிற்­சிக்கு ஒதுக்­கு­கி­றா­ராம். இத­னால் முது­கு­வலி ஏற்­பட்­டுள்­ள­தாம்.

“எனவே, சில தினங்­கள் ஓய்­வில் இருக்­கி­றேன். வலி குறைந்­த­தும் மீண்­டும் பயிற்­சி­யைத் தொடங்­கு­வேன். நட­னத்­து­டன் உடற்­ப­யிற்சி செய்­ய­வும் தவ­று­வ­தில்லை,” என்­கி­றார் ஐஸ்­வர்யா.

ஊர­டங்­கைப் பயன்­ப­டுத்தி இது­வரை பார்க்­காத பல்­வேறு மொழித் திரைப்­ப­டங்­களை, தொலைக்­காட்­சித் தொடர்­க­ளைப் பார்த்து ரசிக்கிறாராம்.

“இந்த ஊர­டங்­கால் நமக்கு மட்­டும் ஓய்வு கிடைக்­க­வில்லை. சுற்­றுப்­பு­றச் சூழ­லுக்­கும் ஓய்வு கிடைத்­தி­ருக்­கிறது. நம்­மால் ஏற்­பட்ட காயங்­களில் இருந்து சுற்­றுச்­சூ­ழல் குண­ம­டைந்து வரு­கிறது. பற­வை­க­ளின் ஒலி கேட்டு காலை­யில் கண்விழிக்­கி­றேன். நம்­மில் சில­ருக்கு இதெல்­லாம் புதி­தாக இருக்­கும். நக­ரத்­தில் வசிப்­ப­வர்­க­ளுக்கு மாலை­யில் போக்­கு­வ­ரத்து இரைச்­சல் கேட்­கா­த­தும் சுத்­த­மான காற்­றைச் சுவா­சிப்­ப­தும் ஆனந்த அனு­ப­வ­மாக இருக்­கும்,” என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!