தினமும் 25 ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கும் கதாநாயகி

1 mins read
f7541b43-e9ad-4df4-8b1f-d38e4063523a
நடிகை பிர­னிதா தின­மும் 25 ஆயி­ரம் பேருக்கு உணவு வழங்­கும் நல்ல காரி­யத்­தைச் செய்துகொண்­டி­ருக்­கி­றார்.  படம்: ஊடகம் -

நடிகை பிர­னிதா தின­மும் 25 ஆயி­ரம் பேருக்கு உணவு வழங்­கும் நல்ல காரி­யத்­தைச் செய்துகொண்­டி­ருக்­கி­றார்.

'சகுனி', 'மாஸ்' உள்­ளிட்ட தமிழ்ப் படங்­களில் நடித்­துள்ள இவர், ஆந்­தி­ரா­வில் தாம் வசிக்­கும் பகு­தி­யில் உள்ள வெளி­மா­நில தொழி­லா­ளர்­

க­ளுக்­கும் ஏழை மக்­க­ளுக்­கும் உணவு வழங்­கு­கி­றார்.

ஏதே­னும் தொண்டு நிறு­வ­னத்­தி­டம் இதற்­கான பணத்­தைக் கொடுத்­து­விட்டு கடமை முடிந்­தது என்று எண்­ணா­மல் தானே நேர­டி­யாக கள­மி­றங்கி உள்­ளார் பிர­னிதா.

இவ­ரது நேரடி மேற்­பார்­வை­யில் ஏழை­க­ளுக்கு வழங்­கப்­படும் உணவு சமைக்­கப்­ப­டு­கிறது.

பின்­னர் அந்த உணவு, பொட்­ட­லங்­களில் அடைக்­கப்­பட்டு விநி­யோ­கிக்­கப்­ப­டு­கிறது.

முடிந்­த­வரை தன் கையால் பல­ருக்கு உணவு வழங்கி திருப்தி அடை­கி­றார் பிர­னிதா. இவ­ருக்கு பல­ரும் பாராட்­டுத் தெரி­வித்­துள்­ள­னர்.