'சர்வர் சுந்தரம்' படம் இணையத்தில் வெளியாக வாய்ப்பு

'சர்வர் சுந்தரம்' படம் இணையத்தில் வெளியாக வாய்ப்பு

1 mins read
bb66dbda-cc39-44a4-a475-4f0e570238db
சந்தானம், வைபவி சாண்டில்யா. படம்: ஊடகம் -

தவறான வியாபாரிகளின் முதிர்ச்சியற்ற அணுகுமுறை, தேவையற்றவர்களின் தலையீடு, பொறுப்பானவர்கள் கைவிட்டது ஆகிய வையே 'சர்வர் சுந்தரம்' படம் வெளியாகாமல் முடங்கிக்கிடக்க காரணம் என அதன் இயக்குநர் பால்கி தெரிவித்துள்ளார். எனவே இணையத்தில் நேரடியாக வெளியிடுவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருவதாகத் தகவல்.

இதில் சந்தானம், வைபவி சாண்டில்யா ஜோடி சேர்ந்துள்ளனர். ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். படம் தொடர்பான பணிகள் அனைத்தும் 2016ஆம் ஆண்டே முடிந்துவிட்டன.