இந்தி நடிகர் இர்ஃபான் காலமானார்

இந்தி நடிகர் இர்ஃபான் காலமானார்

1 mins read
5ea676ba-bbef-4495-8bb3-53597f80868d
கடந்த சனிக்கிழமை இரவது தாயார் சாயிதா பேகம் 95 வயதில் காலமானார். ஊரடங்கு காரணமாக இறுதிச்சடங்கில் இர்ஃபான் பங்கேற்க இயலவில்லை. படம்: இணையம் -

பிரபல நடிகர் இர்ஃபான் கான் இன்று (ஏப்ரல் 29) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 54.

'நியூரோ எண்டாக்ரின் ட்யூமர்' எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் இர்ஃபான் கான்.

இதற்காக கடந்த ஆண்டு பல மாதங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார் அவர்.

ஹோமி அடஜானியாவின் 'ஆங்ரேஸி மீடியம்' அவரது நடிப்பில் வெளிவந்த கடைசிப் படமாகும்.

கடந்த 1988ம் ஆண்டு வெளியான 'சலாம் பாம்பே' மூலம் திரையுலகில் அறிமுகமான இர்ஃபான், இந்தியில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் அசத்தியவர்.

'ஸ்லம்டாக் மில்லியனர்', 'ஜுராசிக் வேர்ல்ட்', 'தி அமேசிங் ஸ்பைடர்மேன்' மற்றும் 'லைப் ஆப் பை' உள்ளிட்ட பிரபலமான படங்களிலும் நடிப்பில் முத்திரைப் பதித்தவர்.

கடந்த சனிக்கிழமை இவரது தாயார் சாயிதா பேகம் 95 வயதில் காலமானார். ஊரடங்கு காரணமாக இறுதிச்சடங்கில் இர்ஃபான் பங்கேற்க இயலவில்லை.

இந்நிலையில் இவரது உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

குறிப்புச் சொற்கள்