நடிகை வாணி போஜன் இணையத் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இத்தொடரை ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் ஒருவர் இயக்குகிறார்.
தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான வாணி போஜன் தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
'ஓ மை கடவுளே' படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது கைவசம் 5 படங்களை வைத்துள்ளாராம்.
இந்நிலையில் இணையத் தொடர்களிலும் நடிக்க முன்வந்துள்ளார் வாணி. முருகதாசிடம் துணை இயக்குநராக உள்ளவர் இயக்கத்தில் இவர் நடிக்கும் இணையத் தொடரின் படப்பிடிப்பு ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளது. அது விலக்கப்பட்டதும் இந்தத் தொடர் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகுமாம்.

