இணையத்தில் சத்தமின்றி வெளியான திரைப்படம்

இணையத்தில் சத்தமின்றி வெளியான திரைப்படம்

2 mins read
46ad06a3-1b98-4bb6-88f1-b580a76aa473
'ஆர்.கே.நகர்' படத்தின் ஒரு காட்சியில் வைபவ், சனா ஆல்டாஃப். படம்: ஊடகம் -

தமிழ்த் திரை­யு­ல­கில் அண்­மைய சில தினங்­க­ளாக அதி­ர­டித் திருப்­பங்­கள் நிகழ்ந்து வரு­கின்­றன. அனைத்­துக்­கும் வித்­திட்ட பெருமை கொரோனா கிரு­மி­யையே சாரும்.

ஊர­டங்கு கார­ண­மாக திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்ட நிலை­யில் புதுப்­ப­டங்­க­ளின் வெளி­யீடு தள்­ளிப் போயுள்­ளது. வட்­டிக்­குப் பணம் வாங்கி படம் எடுக்­கும் தயா­ரிப்­பா­ளர்­கள் படத்தை உரிய நேரத்­தில் வெளி­யி­டா­விட்­டால் பெரும் நஷ்­டம் ஏற்­படும் எனப் புலம்­பு­கி­றார்­கள்.

இத்­த­கைய சூழ்­நி­லை­யில் சிறு பட்­ஜெட்­டில் தயா­ரான படங்­களை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யிட அதன் தயா­ரிப்­பா­ளர்­கள் முடிவு செய்­துள்­ள­னர்.

அந்த வகை­யில் சூர்யா தயா­ரிப்­பில் ஜோதிகா நடித்­துள்ள 'பொன்­ம­கள் வந்­தாள்' திரைப்­ப­டம் இணை­யம் வழி (OTT) வெளி­யீடு காண தயா­ரா­கிறது.

எனவே நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கும் முதல் தமிழ்ப் படம் இது­வா­கத்­தான் இருக்­கும் என்று கரு­தப்­பட்ட நிலை­யில், சத்­த­மின்றி 'ஓடிடி' தளத்­தில் வெளி­யாகி உள்­ளது வெங்­கட் பிரபு தயா­ரித்­துள்ள புதுப்­ப­டம்.

தனது 'பிளாக் டிக்­கெட்' நிறு­வ­னம் சார்­பில் வெங்­கட் பிரபு தயா­ரித்­துள்ள படம் 'ஆர்.கே. நகர்'. சர­வ­ண­ரா­ஜன் இயக்கி உள்­ளார்.

இதில் வைபவ் நாய­க­னா­க­வும் சனா ஆல்டாஃப் நாய­கி­யா­க­வும் நடித்­துள்­ள­னர். பிரேம்ஜி அம­ரன் இசை­ய­மைத்­துள்­ளார்.

தனி­யார் டிஜிட்­டல் தளத்­தில் வெளி­யா­கி­யுள்ள இப்­ப­டத்­துக்கு இணை­ய­த்த­ளங்­கள் மூலம் பர­வ­லாக விளம்­ப­ரம் செய்­யப்­ப­டு­கிறது. இத­னால் படம் பார்க்­கும் ரசி­கர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இணை­யம் வழி நேர­டி­யாக திரைப்­ப­டங்­களை வெளி­யிட திரை­ய­ரங்கு உரி­மை­யா­ளர்­களும் விநி­யோ­கஸ்­தர்­களும் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

அதை­யும் மீறி தனது படத்தை வெளி­யிட்­டுள்­ளார் வெங்­கட் பிரபு. இது கோடம்­பாக்­கத்­தில் சல­சலப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.