ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் 'களத்தில் சந்திப்போம்'. ராஜசேகர் ஏற்கெனவே 'மாப்ள சிங்கம்' படத்தை இயக்கியவர். இந்தப் புதிய படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் அருள்நிதி ஜோடியாக பிரியாவும் நடித்துள்ளனர். நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதைப்படி அருள்நிதியும் ஜீவாவும் கபடி வீரர்கள். சிறு வயது முதலே நண்பர்கள் என்றாலும் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். இவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இப்படம் என்கிறார் இயக்குநர்.
இரு கபடி வீரர்களின் கதையைச் சொல்ல வருகிறது 'களத்தில் சந்திப்போம்'
1 mins read
-

