ஆன்ட்ரியா நடித்த முத்தக் காட்சி

முத்தக் காட்சி ஒன்றில் நடிகை ஆன்ட்ரியா நடித்தது தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே இசையமைப்பாளர் அனிருத்துடன் இவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக நடிகர் சித்தார்த்துக்கு இவர் உதட்டில் முத்தமிடும் காணொளி ஒன்றை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இது கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி என்று கூறப்படுகிறது.

இதில் சித்தார்த்தும் ஆன்ட்ரியாவும் நடித்துள்ளனர். இந்த காணொளி எதற்காக இப்போது வெளியானது என்பது தெரியவில்லை.