சிறு வயதில் தாம் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமது தந்தையின் வயதையொத்த ஓர் ஆடவர், தன் முன்னால் ஆபாச கோலத்துடன் காட்சியளித்ததாகவும் அப்போது நடந்ததை நினைக்கும்போது மனம் வலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
"நாட்களின் போக்கில் அவர் எத்தகைய கேவலமான செயலில் ஈடுபட்டார் என்பதை நினைத்துப் பார்த்தபோது மனம் வலிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று அனைவரும் நினைத்துப் பார்க்கவேண்டும்.
"இப்படித்தான் என் மகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது ஒருவன் ஆபாசமான கோலத்தில் அவள் முன் நின்றுள்ளான். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்துத் தேடிய போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது நெருங்கிய நண்பர் குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு மோசமான தொடுதல் நடந்துள்ளது," என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பல பெண்களுக்கு இவ்வாறு கொடுமை நடப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தி உள்ளார்.

