​​​​​​​சமந்தா: நேரம் வரும்வரை பொறுமை காக்க வேண்டும்

1 mins read
145082e0-969e-4861-8768-9404c508d5e7
சினிமாவுக்கு வந்த புதிதில் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. இப்போது திரும்பிப் பார்க்கும்போது என் வயதுக்கேற்ற வேடங்களைத்தான் செய்திருக்கிறேன் என்பது புரிகிறது என்கிறார் சமந்தா. படம்: ஊடகம் -

சினிமாவுக்கு வந்த புதிதில் தமக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருந்ததாகச் சொல்கிறர் நடிகை சமந்தா. தொடக்க காலத்தில் தாம் ஆவேசமாக நடந்து கொண்டதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எதற்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்பதைக் காலம் தமக்கு உணர்த்தி இருப்பதாகவும் சொல்கிறார். "சினிமாவுக்கு வந்த புதிதில் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. இப்போது திரும்பிப் பார்க்கும்போது என் வயதுக்கேற்ற வேடங்களைத்தான் செய்திருக்கிறேன் என்பது புரிகிறது.

"பல முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துக்கொண்டே எனது முத்திரையைப் பதிக்க முயற்சி செய்தேன். அதனால்தான் தனி அடையாளத்தைப் பெற முடிந்தது. "எனவே எதற்கும் ஒரு நேரம் வரவேண்டும். அதுவரை நமக்குப் பொறுமை வேண்டும்," என்கிறார் சமந்தா.