விண்ணைத்தாண்டி வருவாயோ 2; மீண்டும் அதே கூட்டணி

‘விண்­ணைத்­தாண்டி வரு­வாயா’ படத்­தின் இரண்­டாம் பாகம் உரு­வாக இருப்­ப­தாக வெளி­யான தக­வல் ரசி­கர்­களை உற்­சா­கப்­படுத்தி உள்­ளது.

இரண்­டாம் பாகத்­தை­யும் கவு­தம் மேனன் தான் இயக்­கு­கி­றார். ஏ.ஆர்.ரகு­மான் இசை­ய­மைக்­கி­றார்.

கடந்த 2010ம் ஆண்டு வெளி­யா­னது ‘விண்­ணைத்­தாண்டி வரு­வாயா’. இதில் சிம்பு, திரிஷா இணைந்து நடித்­தி­ருந்­த­னர்.

நேர்த்­தி­யான திரைக்­கதை, வச­னங்­கள், இசை என தர­மான திரைப்­ப­டத்­துக்­கு­ரிய அனைத்து அம்­சங்­களும் இருந்­த­தால் இப்­ப­டம் பெரும் வெற்றி பெற்­றது.

இதை­ய­டுத்து படத்­தின் இரண்­டாம் பாகம் எப்­போது வெளி­யா­கும் என ரசி­கர்­கள் கவு­தம் மேன­னி­டம் கேட்டு வந்­த­னர். இந்­நி­லை­யில் இரண்­டாம் பாகத்­துக்­காக உரு­வாக்­கிய கதை­யில் இருந்து ஒரு பகு­தியை மட்­டும் எடுத்து ‘கார்த்­திக் டயல் செய்த எண்’ என்ற பெய­ரில் குறும்­ப­டம் ஒன்றை இயக்­கி­யுள்­ளார் கவு­தம் மேனன். இந்­தக் குறும்­ப­டம் கடந்த மே 20ம் தேதி வெளி­யா­னது. இதற்கு சமூக வலைத்­த­ளங்­களில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இந்நிலையில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ இரண்டாம் பாகத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம் சிம்பு. ‘மாநாடு’ படம் முடிந்த கையோடு கவுதம் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.