சுடச் சுடச் செய்திகள்

ஓவியம் வரைந்து நிதி திரட்டும் சோனாக்‌ஷி சின்ஹா

நடி­கர், நடி­கை­கள் இந்த கொரோனா காலக்­கட்­டத்­தில் தங்­க­ளால் இயன்ற அளவு மற்­ற­வர்­க­ளுக்கு உத­வு­கின்­ற­னர். அந்த வகை­யில் இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா ஓவி­யங்­கள் மூலம் கொரோனா நிதி திரட்டி வரு­கி­றார்.

‘லிங்கா’ படத்­தில் ரஜி­னி­யு­டன் ஜோடி சேர்ந்த இவர் ஓவி­யங்­கள் தீட்­டு­வ­தில் ஆர்­வ­மும் திற­மை­யும் உள்­ள­வர். இவ­ரது ஓவி­யங்­க­ளுக்கு சமூக வலைத்­த­ளங்­களில் நல்ல வர­வேற்பு கிடைத்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் கொரோனா விவ­கா­ரத்­தால் வரு­மா­னம் இன்­றித் தவிக்­கும் தொழி­லா­ளர்­க­ளின் தவிப்பு இவரை வருத்­தப்­பட வைத்­துள்­ளது.

நண்­பர்­களை நேரில் சந்­திக்க முடி­ய­வில்லை என்­பது இவ­ருக்கு வருத்­தம் அளித்­தா­லும், வேறொரு கோணத்­தில் சிந்­திக்­கும்­போது இது ஒரு பிரச்­சினை இல்லை என்று தோன்று­கி­ற­தாம்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதை வர­வேற்­ப­தா­கச் சொல்­ப­வர், வீட்­டில் இருப்­பது தனக்­குச் சவா­லா­ன­தாக இருக்­க­வில்லை என்­கி­றார்.

“அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன் எந்த வேலை­யும் செய்­யா­மல் தொடர்ந்து வீட்­டில் இருப்­ப­தற்கு அதிர்ஷ்­டம் வேண்­டும். ஆனால், தொழி­லா­ளர்­களோ தங்­கள் வீடு­களை விட்டு வெளியே உள்­ள­னர். குடும்­பத்­து­டன் சாப்­பிட உண­வின்றி ஏரா­ள­மா­னோர் தவிக்­கின்­ற­னர். இந்த வாழ்க்­கை­தான் சவா­லா­னது. அவர்­க­ளுக்கு உதவ விரும்­பு­கி­றேன்.

“இந்த ஊர­டங்­கின் மூலம் நான் மீண்­டும் ஓவி­யம் வரை­யத் தொடங்கி விட்­டேன். இவற்றை வைத்து நிதி திரட்ட வேண்­டும் என்­பதே எனது எண்­ணம். நல்ல மனம் படைத்­த­வர்­கள் நினைத்­தால் பெரிய அள­வில் தொழி­லா­ளர்­க­ளுக்கு உதவ முடி­யும்,” என்­கி­றார் சோனாக்‌ஷி சின்ஹா.

இதற்­கி­டையே நடி­கர் அஜித்­தின் ரசி­கர் மன்­றத்­தைச் சேர்ந்த உறுப்­பி­னர்­கள் தொடர்ந்து கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு முடிந்த உத­வி­க­ளைச் செய்து வரு­கின்­ற­னர்.

இது தொடர்­பாக விஜய்­யும் ரசி­கர் மன்ற நிர்­வா­கி­க­ளுக்கு அவ்­வப்­போது சில உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பித்து வரு­கி­றா­ராம்.

இதற்­கி­டையே பல்­வேறு மாநி­லங்­களில் ஊர­டங்­குத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டு வரும் நிலை­யில் பொது­மக்­கள் தங்­கள் கட­மையை உணர்ந்து செயல்­பட வேண்­டும் என திரை­யு­ல­கப் பிர­மு­கர்­கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். நடி­கர் மகேஷ் பாபு தற்­போது படிப்­ப­டி­யாக இயல்புநிலைக்­குத் திரும்­பு­வது குறித்து காணொ­ளிப் பதிவு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார்.

“நாம் இயல்புநிலைக்­குத் திரும்பு­கிறோம். இப்­ப­டி­யான சூழ­லில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என்­பதை உண­ருங்­கள். நீங்­கள் எப்­போது வெளியே சென்­றா­லும் முகக்­க­வ­சம் அணி­யுங்­கள். நம்­மை­யும் மற்­ற­வர்­க­ளை­யும் பாது­காக்க நாம் செய்­யக்­கூ­டிய குறைந்­த­பட்ச செயல் அது­தான். அது பார்க்க வித்­தி­யா­ச­மா­கத் தெரி­ய­லாம். ஆனால் அது­தான் இந்த நேரத்­தில் தேவை.

“நாம் அதற்­குப் பழ­கிக்­கொள்ள வேண்­டும். ஒவ்­வொரு அடி­யாக எடுத்து வைப்­போம். புது இயல்பு நிலைக்கு ஏற்­ற­வாறு மாறு­வோம். மீண்­டும் வாழ்க்­கைப் பய­ணத்­தைத் தொடர்­வோம். முகக்­க­வ­சம் அணி­வது எனக்கு நன்­றா­கத்­தான் இருக்­கிறது. உங்­க­ளுக்கு?” என்று அந்த காணொ­ளி­யில் பேசு­கி­றார் மகேஷ் பாபு.

சில வாரங்­க­ளுக்கு முன்பு சமூக வில­க­லு­டன், அச்­சத்தை உரு­வாக்கு­ப­வர்­க­ளி­டம் இருந்து விலகி இருக்க வேண்­டும் என்று மகேஷ் பாபு பகிர்ந்­துள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon