வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகி வருகிறது ‘கள்ளபார்ட்’

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கள்ளபார்ட்’. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். “வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் என்றால் அரவிந்த்சாமி உடனே நடிக்க ஒப்புக்கொள்வார் எனக் கேள்விப்பட்டேன். அது உண்மை என்பதை அவரிடம் இப்படத்துக்கான கதையைச் சொன்ன போது நேரடியாக உணர்ந்தேன். இப்படத்தில் ரெஜினாவுக்கும் கனமான கதாபாத்திரம் அமைந்துள்ளது,” என்கிறார் ராஜபாண்டி.