‘இடம் பொருள் ஏவல்’ பட வெளியீடு குறித்து புதுத்தகவல்

‘இடம் பொருள் ஏவல்’ படத்­தின் வெளி­யீடு குறித்து புதுத்­த­க­வல் வெளி­யாகி உள்­ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு இப்­படத்­தின் படப்­பி­டிப்பு முடிந்­து­விட்­டது. பிர­பல இயக்­கு­நர் லிங்­கு­சா­மி­யின் திருப்­பதி பிர­தர்ஸ் இதை தயா­ரித்­தி­ருந்­தது.

சீனு ராம­சாமி இயக்­கத்­தில் விஜய் சேது­பதி, நந்­திதா, விஷ்ணு விஷால், ஐஸ்­வர்யா ராஜேஷ் உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர்.

படப்­பி­டிப்பு முடிந்த நிலை­யில் பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளால் வெளி­யீடு தாம­த­மா­னது. அதன் பிறகு சீனு ராம­சாமி வேறு படங்­களை இயக்கி உள்­ளார்.

இந்­நி­லை­யில் லிங்­கு­சாமி தனது பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­களில் இருந்து மீண்­டுள்­ளதை அடுத்து, ‘இடம் பொருள் ஏவல்’ படம் வரும் ஜூன் மாதம் வெளி­யா­கும் என தக­வல் பர­வி­யது. இதை தயா­ரிப்­புத் தரப்பு மறுத்­துள்­ளது.

திருப்­பதி பிர­தர்ஸ் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த சுபாஷ் சந்­தி­ர­போஸ் கூறு­கை­யில், ஊர­டங்கு முடிந்த பின்­னர் விநி­யோகிப்பாளர்கள் மற்­றும் திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­க­ளு­டன் கலந்து பேசி படத்தை எந்த தேதி­யில் வெளி­யி­டு­வது என்று முடிவு செய்­யப்­படும் என்­றார்.

மேலும் தற்­போது வெளி­யான தக­வல் வெறும் வதந்தி என்­றும் யாரும் இதை நம்ப வேண்டாம் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.