சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா'

1 mins read
004f3f97-e9ac-42d4-b15b-94906d72156c
தற்போது கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் 'டிக்கிலோனா' படத்தில் நாயகனாக நடிக்கிறார் சந்தானம். இதில் அவரது ஜோடியாக அனகா, ஷிரின் ஆகிய இருவர் நடித்துள்ளனர். படம்: ஊடகம் -

சந்தானத்தின் படங்கள் பெரிய லாபம் தராவிட்டாலும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அவரும் தன் போக்குக்கு புதுப்படங்களில் நாயகனாக நடித்து அசத்தி வருகிறார்.

தற்போது கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் 'டிக்கிலோனா' படத்தில் நாயகனாக நடிக்கிறார் சந்தானம். இதில் அவரது ஜோடியாக அனகா, ஷிரின் ஆகிய இருவர் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ஆனந்தராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன் என பெரிய நகைச்சுவைப் பட்டாளமே களம் இறங்குகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடம் ஏற்றுள்ளாராம். இதனால் படத்துக்கு கூடுதல் விளம்பரம் கிடைத்துள்ளது. "முதன்முறையாக சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இப்படம் முழுவதும் நகைச்சுவையும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதனால் படத்தின் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது," என்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.