சுரே‌ஷ்: ‘காடுவெட்டி’ யார் மனதையும் புண்படுத்தாது

ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்பு தயா­ரிப்­பா­ள­ராக மட்­டுமே அறி­யப்­பட்ட ஆர்.கே. சுரேஷ் இப்­போது கதா­நா­ய­க­னா­க­வும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த குண­சித்­தி­ரக் கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் நடித்து ரசி­கர்­க­ளி­டம் பாராட்­டு பெற்று வரு­கி­றார்.

தற்­போது ‘காடு­வெட்டி’, ‘ஜோசப்’ மலை­யா­ளப் படத்­தின் தெலுங்கு மறு­ப­திப்பு, இயக்­கு­நர் பாலா­வின் படம் என வரி­சை­யாக ஐந்­தாறு படங்­களில் நடித்­துக்­ கொண்­டி­ருக்­கி­றார் ஆர்.கே. சுரேஷ்.

“பல ஆண்­டு­க­ளாக திரை­யு­ல­கில் இருக்­கி­றேன். நடிக்க வந்து நான்­காண்­டு­கள்­தான் ஆகிறது. தொடக்­கத்­தில் ரசி­கர்­கள் நம்மை ஏற்­பார்­களா எனும் சந்­தே­கம் இருந்தது. இப்­போது எந்­த­வி­த தயக்­க­மும் இல்லை,” என்­கி­றார் ஆர்.கே.சுரேஷ்.

‘காடு­வெட்டி’ படத்­தை பெரிதும் எதிர்­பார்க்­கி­றா­ராம். சோலை இயக்­கத்­தில் உரு­வா­கும் இப்­ப­டத்­தில் சமூ­கத்­துக்­கு தேவை­யான பல்­வேறு நல்ல கருத்­துகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

அண்­மைக்­ கா­ல­மாக சர்ச்­சைக்­கு­ரிய படங்­க­ளின் வரத்­தால் திரை­யு­ல­கில் சல­ச­லப்பு நில­வு­வ­தா­க குறிப்­பி­டு­ப­வர், ‘காடு­வெட்டி’ யார் மன­தை­யும் புண்­ப­டுத்­தாது என உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார்.

“இது நாய­க­னைச் சார்ந்­துள்ள கதை. இயக்­கு­நர் சோலை ஒவ்­வொரு காட்­சி­யை­யும் மிகக் கவ­ன­மாக உரு­வாக்கி உள்­ளார். அத­னால்­தான் நடிக்க ஒப்­புக்­கொண்­டேன்.

“தமிழகத்தில் ‘காடுவெட்டி’ குருவும் முக்கியமான ஒரு சமுதாய பிரமுகர். எனினும் இது அவருடைய வாழ்க்கைப்படம் என்று கூறிவிட முடியாது. ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தைப் போன்ற கதைக்களம் இது.

“நான் காடுவெட்டி குருவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் போன்ற கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று பலரும் கூறினர். எனது தோற்றத்துக்கு குரலுக்கு ஏற்ற மாதிரியான கதை தேடி வரும்போது மறுக்காமல் ஏற்று நடிக்கிறேன். படத்தைப் படமாகப் பார்த்தால் எந்தப் பிரச்சினையும் வர வாய்ப்பில்லை.

“அதுமட்டுமல்ல, ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் என்னிடம்தான் கால்ஷீட் கேட்டுள்ளனர். கைவசம் உள்ள படங்களை முடித்த கையோடு அதில் நடிக்க இருக்கிறேன். அது விசாரணை, புலனாய்வை மையமாக வைத்து உருவாகும் படம். மலையாளப் படமான ‘ஜோசப்’ மறுபதிப்பை இயக்குநர் பாலா தயாரிக்கிறார்,” என்கிறார் சுரேஷ்.

இன்று சினிமாவில் தாம் ஒரு நாயகனாக தைரியமாக நெஞ்சம் நிமிர்த்தி நிற்க முடிகிறது என்றால் அதற்கு பாலா அண்ணன்தான் காரணம் என்று குறிப்பிடுபவர், பாலா என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் தமது வழக்கம் என்கிறார்.

பாலாவின் அடுத்த படத்தில் இவர்தான் நாயகன் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அப்படி நடந்தால் தன் வாழ்க்கையில் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு ஏதும் இருக்க முடியாது என்று உற்சாகமாகச் சொல்லும் ஆர்.கே. சுரேஷ் முன்பு பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’யில் நடித்துள்ளார்.

“என்னுடைய நடிப்பை பாலா அண்ணனே பாராட்டி உள்ளார். எனக்கு அது ஒன்றே போதும்,” என்கிறார் ஆர்.கே. சுரேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!