'காட்சிகளை திணிப்பதில்லை'

'காட்சிகளை திணிப்பதில்லை'

1 mins read
330508a9-87b2-49e1-996e-cc2b112e7356
விஜய்ஆண்டனி -

விஜய் ஆண்­டனி நடிக்­கும் படங்­க­ளுக்கு தெலுங்கு தேசத்­தி­லும் நல்ல வர­வேற்பு கிடைத்து வரு­கிறது.

தெலுங்கு ரசி­கர்­களை கவர்­வ­தற்கு என்றே அவ­ரது ஆத­ரவு தரப்பு சில காட்­சி­க­ளை­யும் வச­னங்­க­ளை­யும் வலி­யத் திணிப்­ப­தாக சமூக வலைத்­த­ளங்­களில் ஒரு பேச்சு அடி­ப­டு­கிறது.

இதை வைத்து சிலர் அர­சி­யல் செய்ய வாய்ப்பு இருப்­ப­தாக விஜய் ஆண்­டனி காது­க­ளுக்கு நலன்­வி­ரும்­பி­கள் இதைக் கொண்டு சென்­ற­னர்.

இதை­ய­டுத்து தனது படங்­கள் தமிழ் ரசி­கர்­களை மட்­டுமே மன­திற்­கொண்டு உரு­வாக்­கப்­ப­டு­வ­தாக விஜய் ஆண்­டனி விளக்­கம் அளித்­துள்­ளார்.

"எனது படங்­கள் ஆந்­திரா, தெலுங்­கானா மாநி­லங்­க­ளி­லும் ஓர­ளவு வர­வேற்புப் பெறு­வதை அறிந்­துள்­ளேன். என்­னைப் பொறுத்த­ வரை அனைத்­தும் கதைக் க­ளத்­துக்கு ஏற்ப இருக்க வேண்­டும் என விரும்­பு­வேன்.

"தேவை­யின்றி காட்­சி­களை, வச­னங்­க­ளைத் திணிப்­ப­தில்லை. அதே சம­யம் சில அடிப்­படை விஷ­யங்­க­ளுக்­காக ஒன்­றி­ரண்டு வச­னங்­களை மொழிக்கு ஏற்ப சேர்ப்­ப­துண்டு.

"இது­வரை தெலுங்கு ரசி­கர்­க­ளைக் கவர வேண்­டும் என்ற நோக்­கத்­தில் எனது படங்­களில் எந்த காட்­சி­யும் கூடு­த­லாக சேர்க்­கப்­ப­ட­வில்லை," என்­கி­றார் விஜய் ஆண்­டனி.

தாம் நடித்­துள்ள 'இந்­தியா பாகிஸ்­தான்' திரைப்­ப­டம் தான் தமது இந்த விளக்­கத்­துக்கு சரி­யான உதா­ர­ணம் என்று குறிப்­பி­டும் அவர், அப்­ப­டத்­தில் நகைச்­சுவை கருதி தெலுங்­குப் பதிப்­பில் சில வச­னங்­கள் மட்­டும் சேர்க்­கப்­பட்­ட­தாக சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

தன்­னைப் போலவே மேலும் சில நடி­கர், நடி­கை­கள் சம்­ப­ளத்­தைக் குறைக்க முன்­வந்­தி­ருப்­பது பாராட்­டுக்­கு­ரி­யது என்­கி­றார் விஜய் ஆண்­டனி. சம்­ப­ளம் குறைத்­தோர் பட்­டி­ய­லில் அண்­மை­யில் இணைந்­தி­ருப்­ப­வர் நடி­கர் நாசர்.