டூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்த நயன்தாரா

மிலிந்த்ராவ் இயக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தில் இடம்பெறும் அதிரடி சண்டைக் காட்சிகளில் நயன்தாரா டூப் இல்லாமல் நடித்தது குறித்து கோடம்பாக்கத்தில் பெரிதாகப் பேசப்படுகிறது.

தமிழில் ‘அவள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மிலிந்த். இவர் ரடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி வருகிறார்.

இது விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம். இதில் கண்பார்வையற்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

இது கடந்த 2011ம் ஆண்டு வெளியான கொரிய மொழி படத்தின் மறுபதிப்பாம். இதன் சண்டைக் காட்சிகள் ஆபத்து நிறைந்தவை என்றாலும் தயக்கமின்றி நடித்துள்ளார் நயன்தாரா.

தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவங்கி உள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படம் வெளியாகுமாம்.