நீச்சல் உடையணிந்த படங்களை வெளியிட்ட ஹன்சிகா

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் முன்னணி நாயகிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஹன்சிகாவும் தன் பங்குக்கு நீச்சல் உடையில் காட்சி தரும் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் 50வது படமாக உருவாகி வருகிறது ‘மகா’. இதில் சிம்பு கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

படம் விரைவில் வெளியீடு காண உள்ள நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீச்சல் உடை அணிந்துள்ள கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. அதிலும் மதுக்கிண்ணம் ஒன்றைக் கையில் ஏந்தியபடி போஸ் கொடுத்துள்ளார். அக்கிண்ணத்தில் இருப்பது மதுவா, பழரசமா என்பது அவருக்கே வெளிச்சம்.