சூழ்நிலைக்கேற்ப ஒத்துழைப்போம் - வித்யா பாலன்

தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் புதுப்­படங்­களை திரை­ய­ரங்­கு­களில் வெளி­யிட வாய்ப்பே இல்லை என நடிகை வித்யா பாலன் கூறி­யுள்­ளார். இணை­யம் வழி நேர­டி­யாக படங்களை வெளி­யிட திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் எதிர்ப்பு தெரி­வித்து வரும் நிலை­யில் இது தொடர்­பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

திரை­ய­ரங்­கு­களை திறந்த பிறகு முந்­தைய இயல்பு நிலை திரும்­பி­வி­டும் என்­பதை அதன் உரி­மை­யா­ளர்­கள் புரிந்துகொள்ள வேண்­டும் என அவர் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

“கொரோனா ஊர­டங்­கால் படங்­களை திரையரங்கு­களில் திரை­யிட முடி­யா­மல் இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாக தயா­ரிப்­பா­ளர்­கள் காத்­தி­ருக்­கின்­ற­னர். இத­னால் புதிய படங்­களை இணை­ய­த்த­ளத்­தில் வெளி­யிட சிலர் முன் வந்­துள்­ள­னர். வேறு வழி இல்­லா­மல்­தான் இணை­ய­த­ளத்­தில் வெளி­யிட வேண்­டிய நிலைமை ஏற்­பட்டு உள்­ளது,” என்று வித்யா பாலன் கூறி­யுள்­ளார்.

திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்ட பின்­னர் அவற்­றில் தங்­கள் படங்­களை வெளி­யி­டவே தயா­ரிப்­பாளர்கள் விரும்­பு­வார்­கள் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், ரசி­கர்­க­ளுக்­கும் அவ்­வாறு படம் பார்ப்­ப­து­தான் பிடிக்­கும் எனத் தெரி­வித்­துள்­ளார்.

‘ஓடிடி’ எனப்­படும் புதிய தளத்­தில் திரைப்­ப­டங்­களை வெளி­யிட முடி­யும் என்­பது நல்ல விஷ­யம் என்­றும், அதில் புதுப்­ப­டங்­களை வெளி­யி­டு­வது என்­பது தற்­கா­லி­க­மான ஒரு ஏற்­பா­டு­தான் என்­றும் வித்யா மேலும் கூறி உள்­ளார்.

“எனவே தற்­போ­தைய சூழ்­நி­லை­யைக் கருத்­தில் கொண்டு அனை­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஒத்­து­ழைக்க வேண்­டும்.

“அப்­போ­து­தான் திரை­யு­ல­கம் தொடர்ந்து வளர்ச்சி காணும். “இல்­லை­யெ­னில் இத்­தொ­ழிலை நம்­பி­யுள்ள ஆயி­ரக் கணக்­கான தொழி­லா­ளர்­கள் பாதிக்­கப்­ப­டு­வர்,” என்­கி­றார் வித்யா.