'குட்டி ஸ்டோரி' பாடலை வைத்துக் காணொளி ஒன்றை உருவாக்கி சமூக வலைத் தளங்களில் வெளியிட்டுள்ளார் நடிகை வேதிகா.
'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளார். இது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், அந்தப் பாடலை வைத்து 'டிக்டாக்' செயலி மூலம் காணொளி உருவாக்கி உள்ளார் வேதிகா. இதை அண்மையில் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் வெளியிட ஏராளமான ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் வேதிகாவின் முயற்சி சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனராம். இதனால் மிக விரைவில் பல லட்சம் பேர் இந்தக் காணொளியைப் பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

