சுடச் சுடச் செய்திகள்

'கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது மாஸ்டர் படப்பிடிப்பு'

‘மாஸ்­டர்’ படத்­தில் நடித்­தது கல்­லூரி மாண­வர்­கள் ஒன்­றா­கச் சுற்­றுலா சென்று மகிழ்­வது போன்ற உணர்­வை­யும் அனு­ப­வத்­தை­யும் தந்­த­தா­கச் சொல்­கி­றார் அதன் நாயகி மாள­விகா மோக­னன்.

ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­ட­போது இங்­கி­லாந்­தில் மேற்­கல்வி பயின்­று­வ­ரும் இவ­ரது இளைய சகோ­த­ரர் நாடு திரும்ப முடி­யா­மல் லண்­ட­னில் சிக்­கிக் கொண்­டார்.

இத­னால் வருத்­தத்­தில் இருந்த மாள­விகா தற்­போது இரட்­டிப்பு உற்­சா­கத்­து­ட­னும் நிம்­ம­தி­யு­ட­னும் காணப்­ப­டு­கி­றார். கார­ணம் சகோ­த­ரர் ஊர் திரும்பி விட்­டார்.

“தற்­போது தங்­கு­வி­டு­தி­யில் 14 நாட்­கள் தன்­னைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­டுள்­ளார் என் தம்பி. அவ­ரும் வீட்­டுக்கு வந்­து­விட்­டால் பிறகு ஆட்­டம் பாட்­டம்­தான்.

“எல்­லோ­ருக்­கும் இந்த ஊர­டங்கு வேளை­யில் பொழுது போ­வது சிர­ம­மாக இருக்­கிறது எனில் நான் வழக்­கத்­தை­விட கூடு­தல் உற்­சா­கத்­து­டன் இருப்­ப­தா­கச் சொல்­வேன்.

“ஏனெ­னில் படப்­பி­டிப்­புக்­காக காலை சீக்­கி­ரமே எழுந்து ஓடிய காலம் போய் இப்­போது மதி­யம் 12 மணி அள­வில்­தான் தூங்கி எழு­கி­றேன்,” என்று வெளிப்­ப­டை­யா­கச் சொல்­லிச் சிரிக்­கி­றார் மாள­விகா.

ஒரு­வேளை சீக்­கி­ரமே கண்­வி­ழித்­தால் சமை­ய­லில் தன் அம்­மா­வுக்கு சில உத­வி­க­ளைச் செய்­வது வழக்­க­மாம்.

இது­வரை சமை­ய­ல­றைப் பக்­கம் அதி­கம் செல்­லா­த­வர் இப்­போ­தும்­கூட பாத்­தி­ரங்­கள் கழு­வு­வது, காய்­க­றி­கள் நறுக்­கு­வது, காரப்­பொடி, உப்பு என சமை­யல் பொருட்­களை எடுத்­துக் கொடுப்­பது என்று சின்­னச் சின்ன உத­வி­க­ளைத்­தான் செய்­கி­றா­ராம்.

“சமை­யலை முடித்­த­பி­றகு அந்த அறையை சுத்­தம் செய்­வ­தும் என் வேலை­தான். மதிய உண­வுக்­குப்­பின் புத்­த­கங்­கள் படிப்­பேன். தோழி­க­ளு­டன் இணை­யம் வழி சது­ரங்­கம், லூடோ போன்ற விளை­யாட்­டு­களில் பங்­கேற்­பேன்.

“மாலை ஆகி­விட்­டால் சினிமா பார்ப்­ப­து­தான் என்­னு­டைய முக்­கி­ய­மான வேலை, பொழு­து­போக்கு. வெளி­நாட்­டுப் படங்­களை அதி­கம் பார்த்து வரு­கி­றேன். அடுத்த சுற்­றில் இந்­தி­யப் படங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிப்­பேன்.

“இவ்­வாறு இரவு கண்­வி­ழித்­துப் படங்­கள் பார்ப்­ப­தால்­தான் மறு­நாள் காலை கண்­வி­ழிக்க மிக­வும் தாம­த­மா­கிறது,” என்­கி­றார் மாள­விகா.

‘மாஸ்­டர்’ பட அனு­ப­வம் இவ­ருக்கு எதிர்­பார்த்­த­தை­விட அதிக மகிழ்ச்­சி­யைத் தந்­துள்­ளது. முழுக்க இளை­யர்­க­ளின் பங்­கேற்­பு­டன் ‘மாஸ்­டர்’ உரு­வாகி உள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர் எல்­லோ­ருமே இளை­யர்­க­ளுக்கு உரிய சுறு­சு­றுப்­பு­டன் பணி­யாற்­றி­ய­தா­கச் சொல்­கி­றார்.

“படப்­பி­டிப்­புத்­த­ளம் எப்­போ­துமே கல­க­லப்­பாக இருக்­கும். விஜய் சார் இவ்­வ­ளவு எளி­மை­யான மனி­த­ராக பேசிப்­ ப­ழ­கு­வார் என அறவே எதிர்­பார்க்­க­வில்லை. படப்­பி­டிப்­பின் முதல் நாளன்று அவ­ரு­டன் இணைந்து நடிக்­கும் காட்சி பட­மாக்­கப்­பட்­டது. நான் சற்று தடு­மாற்­ற­த்துடன் இருந்­தேன். அது சற்று கடி­ன­மான காட்­சி­யும்­கூட.

“ஆனால், விஜய் சார் நான் கச்­சி­த­மாக நடிப்­ப­தா­கச் சொல்லி ஊக்­கப்­ப­டுத்­தி­னார். படப்­பி­டிப்பு முழு­வ­தும் அனை­வ­ரை­யும் அவர் இவ்­வாறு பாராட்டி உற்­சா­க­ம­ளித்­தது ஆச்­ச­ரி­யப்­பட வைத்­தது.

“பெரும்­பா­லும் அமை­தி­யாக இருப்­பார். ஆனால், அவ­ரது இனி­மை­யான அணு­கு­முறை வெகு­வாக ரசிக்க வைக்­கும். இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ் நாம் சொல்­லும் சில யோச­னை­கள் சரி­யாக இருந்­தால் உடனே ஏற்­றுக்­கொள்­வார். அவ­ரு­டன் மீண்­டும் இணைந்து பணி­யாற்ற விரும்­பு­கி­றேன்,” என்­கி­றார் மாள­விகா மோக­னன்.

‘மாஸ்­டர்’ படத்­தின் அன்­றாட படப்­பி­டிப்பு முடிந்த பிற­கும் படக்­கு­ழு­வினர் உடனே கிளம்­பி­விட மாட்­டார்­க­ளாம். சிறு­சிறு குழுக்­க­ளா­கப் பிரிந்து கல­க­லப்­பா­கப் பேசி சிரித்து மகிழ்­வார்­க­ளாம்.

“அத­னால்­தான் இந்­தப் படத்­தில் பங்­கு­பெற்­றது ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் கல்­லூரி நாட்­களை நினை­வு­ப­டுத்­து­வது போல் இருந்­தது என்­பேன். இது­போன்ற படங்­களில் நடித்­தது, அது­வும் விஜய்­யு­டன் ஜோடி சேர்ந்­தது எனது அதிர்ஷ்­டம்,” என்­கி­றார் மாள­விகா மோக­னன்.

மேலும் தமிழ்த் திரை­யு­ல­கில் எல்­லோ­ருமே நட்­பா­கப் பேசிப் பழ­கு­வ­தா­கப் பாராட்­டு­கி­றார். எனவே தமி­ழில் தொடர்ந்து நடிக்க விரும்­பு­ப­வர், ‘மாஸ்­டர்’ வெற்றி தமது இந்த ஆசையை நிறை­வேற்­றும் என நம்­பு­கி­றா­ராம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon