நவீன் இயக்கத்தில் ‘அக்னிச் சிறகுகள்’

‘மூடர்­கூ­டம்’ நவீன் இயக்­கத்­தில் விஜய் ஆண்­டனி, அருண் விஜய் நடிப்­பில் உரு­வாகி இருக்­கும் படம் ‘அக்­னிச்­ சி­ற­கு­கள்’.

இது அதி­ரடி சண்­டைக் காட்­சி­களும் திடீர் திருப்­பங்­களும் கொண்ட திகில் கதையை மைய­மாக வைத்து உரு­வா­கி­யுள்­ளது.

அக்­‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிர­காஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகி­யோ­ரும் முக்­கிய வேடங்­களில் நடிக்­கி­றார்­கள். கே.ஏ.பாச்சா ஒளிப்­ப­திவு செய்ய, நட­ரா­ஜன் சங்­க­ரன் இசை­ய­மைக்­கி­றார். டி.சிவா அதிக பொருட்­செ­ல­வில் இப்­ப­டத்தை தயா­ரித்து வரு­கி­றார்.

கோல்­கத்­தா­வில் முதற்­கட்ட படப்­பி­டிப்பை முடித்­துள்­ள­னர். அடுத்து கஜ­கஸ்­தா­னில் பல முக்கிய காட்­சி­க­ளைப் பட­மாக்கி உள்­ள­னர்.

கதைப்­படி சீனு எனும் கதா­பாத்­தி­ரத்­தில் விஜய் ஆண்டனியும் ரஞ்­சித் என்ற வேடத்­தில் அருண் விஜய்­யும் நடித்­துள்­ள­னர்.

அக்­‌ஷரா ஹாச­னுக்கு மிக கன­மான கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ள­தாம்.

ஊர­டங்கு முடி­வுக்கு வந்த பிறகு இறு­திக்­கட்ட படப்­பி­டிப்பை துவங்கத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

அநே­க­மாக இந்­தாண்டு இறு­திக்­குள் படம் வெளி­யீடு காணும் என கோடம்பாக்க விவரப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.