சுடச் சுடச் செய்திகள்

மத்­திய, மாநில அர­சு­களுக்கு ஆண்ட்­ரியா அறிவுரை

புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­க­ளின் பிரச்­சினை தொடர்­பாக மத்­திய, மாநில அர­சு­க­ளின் செயல்­பாடு குறித்து தனது கோபத்தை வெளிப்­ப­டுத்தி உள்­ளார் நடிகை ஆண்ட்­ரியா.

தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் இது குறித்து அவர் பதி­விட்­டுள்­ளார்.

“அண்­மை­யில் ஒரு­நாள் நான் தூங்கி விழித்­த­போது என் அறை­யின் சன்­ன­லுக்கு வெளியே சில தேனீக்­க­ளைக் கண்­டேன். எனது வீட்­டின் மாடத்­தின் அருகே உள்ள ஒரு மாம­ரத்­தில் ஒரு பெரிய தேன்­கூடு இருந்­தது.

“அவை என்­னைக் கடிக்­கா­மல் இருக்க வேறு இடத்­துக்கு அப்­பு­றப்­ப­டுத்த சிலரை அழைத்­தேன்,” எனக் குறிப்­பிட்­டுள்­ளார் ஆண்ட்­ரியா.

தேனீக்­க­ளைப் பூச்­சிக்­கொல்லி மருந்து அடித்து சாக­டிப்­பது அல்­லது அவற்­றோடு வாழ பழ­கிக்­கொள்­வது என்ற இரண்டு வாய்ப்­பு­கள் தமக்கு இருந்­த­தாக தெரி­வித்­துள்ள அவர், தமக்­குப் பூச்­சி­கள் என்­றாலே பயம் எனக் கூறி­யுள்­ளார்.

“தேனீக்­களை பாது­காக்­கும் பொறுப்பு எனக்­கும் இருப்­ப­தாக உணர்­கி­றேன். ஏனெ­னில் சுற்­றுப்­பு­றச் சூழலை காப்­ப­தில் அவற்­றின் பங்கு முக்­கி­ய­மா­னது. தேனீக்­கள் அழிந்­தால் மனித இன­மும் அழிந்து விடும் என்­ப­தைப் புரிந்து கொள்­ளுங்­கள்.

“இது தேனீக்­கள் பற்­றிய கதை­யாக இருந்­தா­லும் தற்­போது நாட்­டில் நடக்­கும் புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் பிரச்­சி­னை­யும் இதில் இருக்­கிறது.

“என் வீட்­டுப் பால்­க­னி­யில் இருக்­கும் தேனீக்­களை பாது­காப்­ப­தில் எனக்கு பொறுப்பு இருக்­கிறது. அப்­படி என்­றால் நாடு முழு­வ­தும் ஆத­ர­வின்றி தவிக்­கும் லட்­சக்­க­ணக்­கான புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­களை பாது­காப்­பது அர­சின் பொறுப்பு அல்­லவா?” என்று ஆண்ட்­ரியா தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும், தேனீக்­க­ளி­டம் இருந்து மனி­தர்­கள் கற்­றுக்­கொள்ள வேண்­டிய பாடம் அதி­கம் உள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார். இதன் மூலம் அவர் மத்­திய, மாநில அர­சு­களை விமர்­சித்து இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon