பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் படம்

பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் படம்

1 mins read
d64ce960-55ec-4d4a-a682-831335d32b7b
'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் சுரேஷ், ரவீனா ரவி. -

ஆர்.டி.எம். இயக்­கத்­தில் சுரேஷ், ரவீனா ரவி நடிப்­பில் உரு­வாகி இருக்­கும் படம் 'காவல்­துறை உங்­கள் நண்­பன்'.

மைம் கோபி முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார். ஆதித்யா, சூர்யா இசை­ய­மைக்­கும் இப்­ப­டத்­திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப் ­ப­திவு பணி­களை மேற்­கொண்­டுள்­ளார்.

இன்­றைய சமூ­கத்­தில் பெண்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­களை மைய­மாக வைத்து கதைக்­களம் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாம்.

"காவல்­துறை அதி­காரி ஒரு­வ­ருக்­கும், இணை­யம் வழி வாங்­கப்­படும் உணவை வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் கொண்டு சேர்க்­கும் ஊழி­ய­ருக்­கும் இடை­யில் நடை­பெ­றும் நிகழ்­வு­க­ளைக் கொண்டு காட்­சி­க­ளைக் கோர்த்­துள்­ளோம்.

"இந்த நிகழ்­வு­க­ளின் பின்­ன­ணி­யில் பல சுவா­ர­சி­யங்­களும் திடீர் திருப்­பங்­களும் இடம் பெற்­றி­ருக்­கும். அத­னால் காட்­சி­கள் விறு­வி­றுப்­பாக நக­ரும்.

"அதே நேரம் மக்­களை ஈர்க்க கூடிய வகை­யில் கமர்­ஷி­யல் அம்­சங்­கள் நிறைந்­த­தா­க­வும் படம் இருக்­கும். திரை­ய­ரங்­கில் பார்க்­கும் அனு­ப­வம் கூடு­தல் சுவா­ர­சி­யம் அளிக்­கும்," என்­கி­றார் இயக்­கு­நர்.

கொரோனா ஊ­ர­டங்­குக்­கும் முன்பே வெளி­யாகி இருக்க வேண்­டி­ய­தாம்்். அனைத்­துப் பணி­களும் முடி­வ­டைந்­தி­ருப்­ப­தால் ஊர­டங்கு முடி­வுக்கு வந்த கையோடு படம் வெளி­யா­கிறது.