போட்டி மனப்பான்மையில் இருந்து நாம் மாற வேண்டும் - அமலா பால் அறிவுரை

போட்டி மனப்பான்மையில் இருந்து நாம் மாற வேண்டும் - அமலா பால் அறிவுரை

2 mins read
f7f81638-12f8-45f3-8ca9-a3b20d5326e0
ஒரு­வர் செய்­வதை நாமும் செய்­ய­வேண்­டும் என்­கிற அவ­சி­யம் இல்லை. மேலும் அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளின் பின்­னால் ஓட­வேண்­டிய தேவை­யும் இல்லை என்­கி­றார் அம­லா­பால். படம்: ஊடகம் -

கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து மக்­க­ளைப் பாது­காக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே மத்­திய, மாநில அர­சு­கள் ஊர­டங்கை அமல்­ப­டுத்தி இருப்­ப­தா­கக் கூறு­கி­றார் அமலா பால்.

இந்த ஊர­டங்கு வேளை­யில் புதி­தாக எதை­யும் கற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை என்று புலம்­பவோ வருத்­தப்­ப­டவோ வேண்­டாம் என்­றும் தமது சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

வாழ்க்கை என்­றாலே போட்டி, பந்­த­யம் என்று நினைக்­கும் மனோ­பா­வத்­தில் இருந்து அனை­வ­ரும் மாற­வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், பிர­ஷர் குக்­கர் வாழ்க்­கை­யில் இருந்து வெளியே வாருங்­கள் என்று மன அழுத்­தம் குறித்­தும் தன் கருத்­தைப் பதிவு செய்­துள்­ளார்.

"இந்த ஊர­டங்கு காலத்­தில் புதி­தாக எதை­யும் கற்­றுக்­கொள்­ள­வில்லை என்றோ, புத்­த­கங்­க­ளைப் படிக்­க­வில்லை என்றோ வருத்­தப்­பட வேண்­டாம். இது கற்­றுக்­கொள்­வ­தற்­கான நேரமோ அல்­லது உற்­பத்­தி­யைப் பெருக்­கு­வ­தற்­கான நேரமோ அல்ல.

"எனவே அமை­தி­யாக இருங்­கள். ஒரு­வர் செய்­வதை நாமும் செய்­ய­வேண்­டும் என்­கிற அவ­சி­யம் இல்லை. மேலும் அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளின் பின்­னால் ஓட­வேண்­டிய தேவை­யும் இல்லை," என்­கி­றார் அம­லா­பால்.

இவர் இவ்­வாறு அர­சுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்ள நிலை­யில், நடிகை லட்­சுமி ராய், புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­க­ளின் பரி­தாப நிலை குறித்து கவ­லையை வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்று என்­பது இயற்­கை­யின் கோபம் என­வும் வர்­ணித்­துள்­ளார்.

"கட­வுள்­தான் உல­கைக் காப்­பாற்ற வேண்­டும். இனி இதை­யெல்­லாம் பார்க்க முடி­யாது.

"புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­க­ளுக்கு உதவி செய்து அவர்­க­ளைக் காப்­பாற்­று­வோம்.

"இந்­தக் கடு­மை­யான கால­மும் நம்­மை­விட்­டுக் கடந்து போகும். விரை­வில் நல்ல காலம் பிறக்­கும் என்று நம்­பு­வோம்" என்று லட்­சுமி ராய் தமது சமூக வலைத்­த­ளப் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.