கித்தார் கற்றுக்கொள்கிறாராம் ரா‌ஷி கன்னா

கித்தார் கற்றுக்கொள்கிறாராம் ரா‌ஷி கன்னா

1 mins read
e4e9dfc6-989d-46b6-a36b-63f75a1043e6
சமூக வலைத்தளத்தில் ரா‌ஷி கன்னா, தான் கித்தார் இசைக்கருவி வாசித்த காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தக் காணொளிக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பாம். படம்: ஊடகம் -

ஊரடங்கு வேளையில் திரையுலகத்தினர் பல்வேறு விதமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ராஷி கன்னா வெளியிட்ட காணொளிப் பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்மைய சில தினங்களாக கித்தார் வாசிக்கக் கற்று வருகிறார் ராஷி. இதில் ஓரளவு தேறிவிட்ட தைரியத்தில் ஒரு பாடலைப் பாடிக்கொண்டே தாம் கித்தார் வாசிக்கும் காட்சியைப் படமாக்கியுள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள இந்தக் காணொளிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்தப் பதிவில் இசை என்பது இதயத்தின் மொழி என்றும் கித்தார் வாசிக்கக் கற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"எனக்குப் பிடித்தமான பாடல்களில் ஒன்றை வாசிக்கிறேன். எனது இந்த முயற்சி உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்," என்று ராஷி கன்னா தெரிவித்துள்ளார். அவர் நன்றாகப் பாடுவதாகவும் கித்தார் இசைப்பதாகவும் பாராட்டி ஏராளமான ரசிகர்கள் பின்னூட்டமிட்டுள்ளனர்.