நான் வெற்றி பெற்றுவிட்டேன் - கங்­கனா ரணாவத்

நான் வெற்றி பெற்றுவிட்டேன் - கங்­கனா ரணாவத்

2 mins read
6a318b46-7140-49f7-a3bb-1d5fa3f9ff31
கொரோனா விவ­கா­ரத்­துக்­குப் பிறகு திரை­யு­ல­கம் மின்­னி­லக்க துறை­யா­கி­வி­டும். அதற்கேற்ப திரையுலகத்தினர் அனைவரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்­கி­றார் கங்­கனா ரணாவத். படம்: ஊடகம் -

வாழ்க்­கை­யின் சில தரு­ணங்­களில் முக்­கி­ய­மான முடி­வு­களை எடுக்­கத் தயங்­கக் கூடாது என்­கி­றார் நடிகை கங்­கனா ரணா­வத்.

மும்­பை­யில் தனது நிறு­வ­னத்­துக்­காக இவர் வாங்­கி­யுள்ள பிர­ம்மாண்ட கட்­ட­டம் மற்­றும் அதற்­காக இவர் செய்­துள்ள முத­லீடு திரை­யு­ல­கி­னரை அசர வைத்­துள்­ளது.

நெருக்­க­மா­ன­வர்­கள் பல­ரும் வேறு தொழி­லில் முத­லீடு செய்­யு­மா­றும் கட்­ட­டத்­தில் முத­லீடு செய்­யு­மா­றும் அறி­வுரை கூறி­னார்­க­ளாம்.

ஆனால் எதை­யும் காதில் போட்­டுக்­கொள்­ளாத கங்­கனா, தன் போக்­கில் நடை­போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்.

மணி­கர்­ணிகா ஃபிலிம்ஸ் என்ற பெய­ரில் சொந்­த­மாக படத்­த­யா­ரிப்பு நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­யுள்ள இவர், அந்த நிறு­வ­னத்­துக்­காக மும்­பை­யில் முக்­கிய பிர­மு­கர்­கள் வசிக்­கும் பகு­தி­யில் பெரிய மாளி­கை­யைப் போன்ற கட்­ட­டத்தை வாங்கி அழ­காக தன் விருப்­பம் போல் வடி­வ­மைத்­துள்­ளார்.

இதற்­காக அவர் செலவ­ழித்­தி­ருக்­கும் தொகை 48 கோடி ரூபாய்.

சொந்­த­மாக ஒரு ஸ்டூ­டியோ கட்ட நினைத்­த­தா­க­வும் அது தற்­போது சாத்­தி­யப்­ப­டா­த­தால் தனக்­குப் பிடித்த ஒரு மாளி­கையை வாங்கி இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

"படப்­பி­டிப்பு அரங்கு, ஒலிப்­ப­தி­வுக் கூடம் உட்­பட அனைத்து வச­தி­களும் கொண்ட ஸ்டூ­டி­யோவை நிர்­மா­ணிக்க விரும்­பி­னேன். ஆனால் நான் நடித்த 'ரங்­கூன்', 'சிம்­ரன்' உள்­ளிட்ட சில படங்­கள் சரி­யாக ஓட­வில்லை. அத­னால் எனது முயற்­சியை சற்று தள்­ளிப் போட்­டேன்.

"மணி­கர்­ணிகா'வுக்­குப் பிறகு நிலைமை மாறி­யது. எனக்­குப் பிடித்த விதத்­தில் என் மாளி­கை­யைக் கட்­ட­மைத்­துக் கொண்­டேன்.

"வேறெங்­கா­வது வைத்து பட வேலை­க­ளைச் செய்­ய­லாமே என்று பல­ரும் யோசனை கூறி­னர். ஒரு அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்பை வாட­கைக்கு எடுக்­கக் கூடாதா என்­றும் கேட்­ட­னர். உயிர் இல்­லாத ஒரு கண்­ணா­டிக் கூண்­டுக்­குள் என்­னால் இருக்கமுடி­யாது என்­பதே எனது பதில்," என்று கங்­கனா தெரி­வித்­துள்­ளார்.

உயிர்ப்­பு­டன் இருக்­கும் சுவர்­கள், கண்­களை குளிர வைக்­கும் பசுமை உள்­ளிட்ட அம்­சங்­கள் எப்­போ­துமே தன்­னைச் சுற்­றி­யி­ருக்க வேண்­டும் என்று குறிப்­பி­டு­ப­வர், இந்த எண்­ணத்­து­ட­னேயே புது மாளி­கையை வாங்கி இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"எனது கணக்­காய்­வா­ளர், ஏன் இந்த சொத்­தில் பணத்தை முத­லீடு செய்­கி­றீர்­கள்? வழக்­க­மாக நீங்­கள் எந்த தயா­ரிப்பு நிறு­வ­னத்­துக்­காக பணி­யாற்­று­கி­றீர்­களோ அவர்­களே உங்­க­ளுக்­கான இடத்தை வாட­கைக்கு எடுத்­துத் தரு­வார்­களே.

இந்த பணத்தை வைத்து பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­யுங்­கள் அல்­லது ஓர் உண­வ­கத்தை வாங்­குங்­கள் என்­றார்.

"குறைந்­தது ஆண்­டுக்கு 40, 50 லட்­சம் வாட­கைப் பணம் கிடைக்­கும் என்­றும் கூறி­னார். ஆனால் நான் என் முடி­வில் உறு­தி­யாக இருந்­தேன்," என்­கி­றார் கங்­கனா.

இவ­ரது பெற்­றோர் உட்­பட பல­ரும் பணத்தை வீண­டிப்­ப­தாக விமர்­சிக்­கி­றார்­க­ளாம். ஆனால் இந்த முத­லீட்டை தாம் ஒரு சவா­லா­கக் கரு­து­வ­தா­க­வும் இது நல்ல முத­லீடா இல்­லையா என்­பது போகப் போகத் தெரி­யும் என்­றும் சொல்­கி­றார்.

"என்­னைப் பொறுத்­த­வரை ஒரு நடி­கை­யாக நான் வெற்­றி­பெற்­று­விட்­டேன். அந்த நம்­பிக்­கை­யில் தொடர்ந்து நடிக்­கி­றேன். கொரோனா விவ­கா­ரத்­துக்­குப் பிறகு திரை­யு­ல­கம் மின்­னி­லக்க துறை­யா­கி­வி­டும்,.

"அதற்கேற்ப திரையுலகத்தினர் அனைவரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்" என்­கி­றார் கங்­கனா.