‘ஓ அந்த நாட்கள்’ படத்தில் இணைந்த நான்கு நாயகிகள்

ஜேம்ஸ் வசந்­தன் இயக்­கத்­தில் ராதிகா, சுகாசினி, குஷ்பு, ஊர்­வசி நடித்­துள்ள படம் ‘ஓ அந்த நாட்­கள்’.

தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் என மூன்று மொழி­களில் தயா­ரா­கிறது. ஒய்.ஜி.மகேந்­தி­ரன், சுலக்­‌ஷனா, மனோ­பாலா, பானு­சந்­தர் உள்­ளிட்ட மேலும் பல­ரும் நடித்­துள்­ள­னர். இயக்­கு­நர் சுந்­தர்.சி சிறப்பு வேடத்­தில் தோன்­று­கி­றார்.

80 விழுக்­காடு படப்­பி­டிப்பு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடை­பெற்­றுள்­ளது. படத்­தின் கதை, வச­னங்­களை எழுதி இசை­ய­மைப்­ப­தும் ஜேம்ஸ் வசந்­தன்தான்.

இது காத­லும் நகைச்சுவை­யும் கலந்த பட­மாக உரு­வா­கி­ற­தாம்.

“ராதிகா சரத்­கு­மார், சுகா­சினி, குஷ்பு, ஊர்­வசி ஆகிய நால்­வ­ருமே கடந்த 1980களில் தமிழ்த் திரை­யு­ல­கில் முன்­னணி நாய­கி­க­ளாக திகழ்ந்­த­வர்­கள்.

“இவர்­கள் நடித்த நான்கு வெவ்­வேறு கதா­பாத்­தி­ரங்­களை பின்­பு­ல­மாக வைத்து இப்­ப­டத்­துக்­கான கதையை உரு­வாக்கி உள்­ளோம்.

“இந்த நால்­வ­ரது தற்­போ­தைய வாழ்க்­கை­யை­யும் அடித்­த­ள­மாக வைத்து முற்­றி­லும் வித்­தி­யா­ச­மான, குடும்­பப் பாங்­கான படத்தை உரு­வாக்­கு­கி­றோம்.

“இதற்­கேற்ப சுவா­ர­சி­ய­மான திரைக்­கதை அமைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே ரசி­கர்­கள் ஒவ்­வொரு காட்­சி­யை­யும் மனம் ஒன்றி ரசிக்க முடி­யும்,” என்­கி­றார் ஜேம்ஸ் வசந்­தன்.

இப்­ப­டத்­தின் பெரும்­பா­லான பணி­கள் ஏற்­கெ­னவே முடிந்­து­விட்­ட­தால் வெளி­யீடு காண கிட்­டத்­தட்ட தயார்­நி­லை­யில் உள்­ள­தாம்.

எனவே ஊர­டங்கு முடிந்த கையோடு இப்­ப­டத்­தின் வெளி­யீட்டை எதிர்­பார்க்­க­லாம் எனப் படக்­கு­ழு­வி­னர் தெரி­விக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!