அசோக் செல்வனின் ஆசைகள்

‘ஓ மை கட­வுளே’ படத்­தின் வெற்றி அதன் நாய­கன் அசோக் செல்­வனை மிகுந்த உற்­சா­கத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது. பார்ப்­ப­தற்கு சாது­வா­கக் காட்­சி­ய­ளிப்­ப­வர் மலை­யா­ளப் படம் ஒன்­றில் மோகன்­லா­லுக்கு வில்­ல­னாக நடித்­துள்­ளார். மலை­யா­ளத்­தைத் தொடர்ந்து தெலுங்­கி­லும் அறி­மு­க­மா­கி­றார் அசோக்.

தமிழ் சினி­மா­வின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு ‘சூது கவ்­வும்’, ‘தெகிடி’ ஆகிய படங்­களில் அசோக் செல்­வன் நடித்­தி­ருப்­பது தெரிந்­தி­ருக்­கும். அந்­தப் படங்­களில் நடிப்­ப­தற்­கான வாய்ப்­பைப் பெற நிறைய போரா­டி­னா­ராம்.

“நடிக்­க­வேண்­டும் என்ற முயற்­சி­யைத் தொடங்­கி­ய­போது பல நிறு­வ­னங்­க­ளின் படி­யேறி வாய்ப்­புக் கேட்டு அலுத்­துப் போயி­ருக்­கி­றேன். ஏகப்­பட்ட நடிப்­புத் தேர்­வில் பங்­கேற்­றும் எனக்­கான சரி­யான வாய்ப்­பு­கள் அமை­ய­வில்லை. ஒரு­கட்­டத்­தில் சினிமா வேண்­டாம் என்­று­கூட முடி­வெ­டுத்­தேன்.

“அப்­போ­து­தான் ‘சூது கவ்­வும்’ வாய்ப்பு கிடைத்­தது. ஒரு­வேளை இந்­தப் படம் கிடைக்­கா­விட்­டால் சினி­மா­வில் நான் இருந்­தி­ருக்க மாட்­டேன். அதற்­காக இயக்­கு­நர் நலன் குமா­ர­சா­மிக்­குத்­தான் நன்றி தெரிவிக்க வேண்டும். ‘சூது கவ்­வும்’, ‘தெகிடி’ ஆகிய இரு படங்­க­ளின் இரண்­டாம் பாகங்­கள் தயா­ரா­வ­தாக நானும் ஒரு தக­வ­லைக் கேள்­விப்­பட்­டேன். ஆனால் எந்­த­ளவு உண்மை என்­பது தெரி­யாது,” என்று சொல்­லும் அசோக் செல்­வன் நல்ல கிரிக்­கெட் வீர­ராம்.

17 வய­துக்­குட்­பட்ட தமிழ்­நாடு கிரிக்­கெட் அணி­யின் முக்­கிய வீரர்­களில் ஒரு­வ­ராக இருந்­தி­ருக்­கி­றார்.

“என் மனச்­சோர்­விற்கு கிரிக்­கெட்­தான் சிறந்த மருந்­தாக இருக்­கிறது. கிரிக்­கெட் விளை­யா­டும்­போது சினிமா வாய்ப்­பு­கள் ஏதும் தேடி­வ­ர­வில்லை. வாங்­கிய கட­னுக்கு மாதத்­ த­வணை கட்­டு­வது, குடும்ப விவ­கா­ரங்­கள் எது­வும் மன­தில் இருக்­காது.

“என்னை நோக்கி வரும் பந்தை எப்­படி விளாச வேண்­டும் என்­ப­தில் மட்­டுமே என் கவ­னம் இருக்­கும். கிரிக்­கெட்­தான் என்­னைப் பல­வ­கை­யி­லும் ஊக்­கப்படுத்தி­யது,” என்­கி­றார் அசோக் செல்­வன்.

கடந்­தாண்­டும்­கூட ஒரு போட்­டி­யில் சத­ம­டித்­தா­ராம். அந்­தச் சம­யத்­தில் வாய்ப்­பின்றி இருந்­தா­ராம். இத­னால் மன அழுத்­தம் அதி­க­ரித்த நிலை­யில் கிரிக்­கெட் போட்­டி­யில் அடித்த அந்த சதம்­தான் மீண்­டும் முயற்­சி­க­ளைத் தொட­ர­வேண்­டும் என்ற உந்­து­த­லைக் கொடுத்­த­தா­கச் சொல்­கி­றார்.

“என் வாழ்க்­கை­யில் அந்­தக் குறிப்­பிட்ட போட்­டி­யும் நான் அடித்த சத­மும் மறக்­க­மு­டி­யாத நிகழ்­வாக என்­றும் மன­தில் பதிந்­தி­ருக்­கும். மலை­யா­ளத்­தில் ஒரு வர­லாற்­றுப் படத்தில்­ நான் வில்­ல­னாக நடித்­தி­ருக்­கி­றேன். எனவே, இன்­னொரு வர­லாற்­றுப் படத்­தில் நாய­க­னாக நடிக்­க­வேண்­டும் என விரும்­பு­கி­றேன்.

“பொன்­னி­யின் செல்­வன்’ படத்­தில் நடிக்க­வேண்­டும் என்­பது என் ஆசை. அதே­போல் ஒரு வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­தி­லும் நடிக்க விரும்­பு­கி­றேன். இவை­யெல்­லாம் எனது கன­வுக் கதா­பாத்­தி­ரங்­கள்,” என்று சொல்­லும் அசோக் செல்­வன், இந்த ஊர­டங்கு வேளை­யில் குடும்­பத்­தோடு இருப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

அம்­மா­வின் சமை­யல் இவ­ருக்கு ரொம்­பப் பிடிக்­கு­மாம். அண்­மைய சில வாரங்­க­ளாக அவர் வகை வகை­யா­கச் சமைத்­துக் கொடுக்க அனைத்து உணவுக­ளை­யும் ஒரு பிடி பிடித்து வரு­வ­தா­கச் சொல்­கி­றார். புது கார் வாங்­க­வேண்­டும், சென்­னை­யில் பெரிய வீடு வாங்­க­வேண்­டும் என்­ப­தெல்­லாம் அசோக் செல்­வ­னின் ஆசை­களில் சில. திரைப்­ப­டங்­களில் நடித்­த­தன்­வழி ஆசைப்­பட்ட காரை வாங்­கி­விட்­டா­ராம். இப்­போது வீடு வாங்­க­ உழைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!