அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதுப் படம் 'சினம்'. இது அவரது முப்பதாவது படம். தேசிய விருது பெற்ற ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்குகிறார். 'குற்றம் 23'க்குப் பிறகு அருண் விஜய் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி பாலக் லால்வாணி. காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறாராம். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு', 'சகா' படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள். "அருண் விஜய் இதற்கு முன்பு போலிஸ் வேடத்தில் நடித்திருந்தாலும் இப்படத்தில் அவர் நடிப்பு மாறுபட்டதாக இருக்கும்," என்கிறார் இயக்குநர்.
'சினம்' - அருண் விஜய் நடிப்பில் உருவாகும் முப்பதாவது படம்
1 mins read
அருண் விஜய் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவரின் இணையாக பாலக் லால்வாணி நடிக்கிறார். படம்: ஊடகம் -

