பாலியல் தொல்லைகள் இருந்தன - கல்யாணி

பாலியல் தொல்லைகள் இருந்தன - கல்யாணி

1 mins read
93de0f18-81bf-4e82-808a-afe26fdb07cb
படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று நான் முடிவு செய்ததற்கு பாலியல் தொல்லையும் ஒரு காரணம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியபோது உயர் பொறுப்பில் இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்கிறார் கல்யாணி. படம்: ஊடகம் -

சில பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் பெயரைப் பயன்படுத்தி தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாக நடிகை கல்யாணி தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுடன் 'அள்ளித்தந்த வானம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 'இன்பா', 'கத்திக்கப்பல்', 'இளம்புயல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமக்கு பெரிய படங்கள் அமையாததும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்காததும் வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார் கல்யாணி.

"கதாநாயகியாக நடிக்கும்போது என் அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பு வரும். பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் படம். உங்கள் பெண்தான் கதாநாயகி, ஆனால் 'அனுசரித்து' போக வேண்டும் என்று கூறுவார்கள்.

"பின்னாட்களில் தான் அதன் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரிய வந்தது. படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று நான் முடிவு செய்ததற்கு இதுவும் ஒரு காரணம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியபோது உயர் பொறுப்பில் இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தார்," என்கிறார் கல்யாணி.